Union Ministers List Out Now: மூன்றாவது முறையாக பிரதமரான நரேந்திர மோடி; அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் யார்?.. லிஸ்ட் இதோ.!

18வது அமைச்சரவையை வழிநடத்தும் பொறுப்பை பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து, அவரின் அமைச்சரவை சகாக்கள் பொறுப்பேற்பு நிகழ்வும் டெல்லியில் நடைபெற்றது.

18th Lok Sabha Cabinet Ministers (Photo Credit: @rashtrapatibhvn X)

ஜூன் 10, புதுடெல்லி (New Delhi): 2024 இந்தியா தேர்தல்களில் வெற்றியடைந்து பாஜக தலைமையிலான தேசிய (NDA Alliance) ஜனநாயக கூட்டணி, மீண்டும் தொடர்ந்து 3வது முறையாக இந்திய அரசின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. பிரதமராக நரேந்திர மோடி டெல்லி ராஷ்ட்ரபதி பவன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதமருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முறைப்படி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்..

சிறப்பு விருந்தினர்கள்: இந்த விழாவில் மொத்தமாக 8 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர். ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, அவரின் மகன், அதானி குழுமத்தின் உரிமையாளர் கெளதம் அதானி, நடிகர்கள் ரஜினிக்காத, ஷாருக்கான், அக்சய் குமார், வங்கதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் பிரசண்டா தாஹல், மொரிசியஸ் அதிபர் முகம்மத் மியூஸு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே உட்பட பல நாடுகளின் அதிபர்கள், தூதர்கள், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிக்கர்ஜுனா கார்கே உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர். Pilgrims Bus Terror Attack in JK: ஜம்மு காஷ்மீரில் யாத்திரீக்கள் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 10 பேர் பலி?..! பிரதமர் பதவியேற்பு விழா அன்று பயங்கரம்.! 

மத்திய அமைச்சரவை (Cabinet Ministers List) பங்கீடு: கடந்த 2014ம் ஆண்டைத்தொடர்ந்து, 2019 மற்றும் 2024 தேர்தலில் அமோக வெற்றி அடைந்து பிரதமராக தொடர்ந்து 3 வது முறை நரேந்திர மோடி பொறுப்பேற்றார். 30 அமைச்சர்கள், 41 இணை அமைச்சர்கள் என 71 பேர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். இவர்களில் 43 பேர் மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளனர். தெலுங்கு தேசம், ஜனதாதளம் உட்பட கூட்டணிக்கட்சிகளுக்கு 11 அமைச்சரவை பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை துறை ரீதியான விபரங்கள் வெளியாகவில்லை. விரைவில் அவை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் 5 சிறுபான்மையினர், 27 ஓபிசி, 10 எஸ்.சி., 5 எஸ்.டி பிரிவினருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், மத்திய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜேபி நட்டா, சிவராஜ் சிங் சௌகான், நிர்மலா சீதாராமன், சுப்பிரமணியம் ஜெய்சங்கர், மனோகர் லால், எச்.டி குமாரசாமி, பியூஸ் கோயல், தர்மேந்திரா பிரதான், ஜித்தன் ராம் மான்சி, ராஜீவ் ரஞ்சன் சிங், லாலன் சிங், சர்வானந்த் சோனோவால், வீரேந்திர குமார், ராம்மோகன் நாயுடு, ப்ரகலாத் வெங்கடேஷ் ஜோஷி, ஜுவல் ஓரம், கிரிராஜ் சிங், அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிராதித்ய சிந்தியா, பூகேந்திர யாதவ், கஜேந்திர சிங் செகாவத், அன்னபூரணா தேவி, கிரண் ரிஜிஜூ, ஹர்தீப் சிங் பூரி, மன்சூக் மாண்டவியா,

கிஷன் ரெட்டி, சிராஜ் பஸ்வான், சி.ஆர் படேல், இந்திரஜித் சிங், ஜிதேந்திர சிங், அர்ஜுன் ராம் மேக்வால், பிரகாத் கணபதி ராவ் யாதவ், ஜெயந்த் சௌதாரி, ஜித்தன் பிரசாத், ஸ்ரீபாத் யசோத நாயக், பங்கஜ் சௌதாரி, கிருஷ்ண பால், ராம்தாஸ் அத்வாலே, ராம்நாத் தாகூர், நித்யானந்தா ராய், அனுப்பிரியா படேல், சோமண்ணா, பெமசானி சந்திரசேகர், எம்.பி சிங் பஹெல், ஷோபா கரந்த்லாஜே, கீர்த்தி வரதன் சிங், பிஎல் வர்மா, சாந்தனு தாகூர், சுரேஷ் கோபி, எல்.முருகன், அஜய் டம்டா, பண்டி சஞ்சய்குமார், கமலேஷ் பஸ்வான், பஹிரத் சௌத்ரி, சதீஷ் சந்திர தூபே, சஞ்சய் சேட், ரவ்நீத் சிங், துர்காதாஸ் உய்கே, ரக்சா நிகில் கட்சே, சுகாந்த மஜூம்தார், சாவித்ரி தாக்கூர், தோஹன் சாஹி, ராஜ்பூஷன் சௌத்ரி, பூபதி ராஜு ஸ்ரீநிவாஸ் வர்மா, ஹரிஷ் மல்ஹோத்ரா, நிமுபென் பாம்பனியா, முரளிதர் மொஹோல், ஜார்ஜ் குரியன், பவித்ர மார்கரீட்டா ஆகியோர் பொறுப்பேற்றனர்.