MP Veena Devi's Son Dies: எம்பி வீணாதேவியின் மகன் உயிரிழப்பு.. சாலை விபத்தால் நடந்த கொடூரம்..!
பீகாரில் நடந்த சாலை விபத்தில் லோக் ஜனசக்தி கட்சியின் எம்பி வைஷாலி வீணாதேவியின் மகன் ராகுல் ராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
செப்டம்பர் 24, முசாபர்பூர் (Bihar News): பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சியின் எம்பி வீணா தேவியின் (MP Veena Devi) மகன் சோட்டு சிங் என்ற ராகுல் ராஜ், முசாபர்பூரில் உள்ள பூர் காவல் நிலையப் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்தார். தினேஷ்வர் பெட்ரோல் பம்ப் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் அவரது இரு சக்கர வாகனம் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராகுல் ராஜை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து, அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். Bus Accident: 30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 4 பேர் பரிதாப பலி..!
வீணா தேவி ஒரு பிரபலமான அரசியல்வாதி ஆவார், அவர் 2024 தேர்தலில் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினராக மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். அவரது கணவர் தினேஷ் சிங். இந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, பலர் ராகுல் ராஜிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.