செப்டம்பர் 23, அமராவதி (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், அமராவதி (Amravati) அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சுமார் 50 பேருடன் சென்ற பேருந்து, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து (Private Bus Accident) விபத்துக்குள்ளானது. வளைவில் திரும்பும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அதில், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Dead Man Becomes Alive: இறந்தபின் மீண்டும் உயிருடன் வந்த அதிசய நபர்.. மருத்துவர்கள் அதிர்ச்சி..!
பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்து:
A bus has rolled down a gorge in Maharashtra's Amravati. There were 50 passengers onboard the bus at the time of the accident, all have received injuries. Rescue operations are underway.#Maharashtra pic.twitter.com/07MJD9yIgG
— Vani Mehrotra (@vani_mehrotra) September 23, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)