CPIM Leader Sitaram Yechury Passes Away: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவு..!

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

CPIM National General Secretary Sitaram Yechury (Photo Credit: @sarbanandsonwal X)

செப்டம்பர் 12, புதுடெல்லி (New Delhi): இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of India) தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (Sitaram Yechury) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (செப்டம்பர் 12) காலமானார். 72 வயதான இவர், கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி நிமோனியா போன்ற மார்புத் தொற்று சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கும், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு வந்தார். சமீபத்தில் அவர் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. பின் அவரை பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு கண்காணித்து வந்துள்ளனர். சுவாசக் கருவிகளின் உதவியுடன் அவர் சுவாசித்து வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். Gambling Addict: சூதாட்டத்தில் மனைவியை பணயம் வைத்த கணவன்; பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதி.. பெண் பரபரப்பு புகார்..!

மார்க்சிஸ்ட் (Marxist) கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சீதாராம் யெச்சூரி செயல்பட்டு வந்தார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது 3-வது முறையாக அந்த பொறுப்பில் இருந்தார்.

கடந்த 1996-ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கான பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவதற்கு ப.சிதம்பரத்துடன் இணைந்து யெச்சூரி முக்கிய பங்களிப்பை அளித்தார். 2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார். 1975-யில், ஜேஎன்யுவில் யெச்சூரி மாணவராக இருந்தபோது, ​​அவசரநிலை காலத்தில் அவர் கைது செய்யப்பட்டார். 1977-78 இடையிலான ஓராண்டில் 3 முறை ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.