Sexual Abuse | Harassment Representational Picture (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 12, ராம்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ராம்பூரில் (Rampur) உள்ள ஷஹபாத் காவல்நிலையத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘எனக்கு 2013-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. வரதட்சணைக்காக என் மாமனாரும், கணவரும் என்னை சித்திரவதை செய்து தாக்கினர். என் கணவர் மது மற்றும் சூதாட்டத்திற்கு (Gambling) அடிமையானவர். அவர் சூதாட்டத்தில், சுமார் 7 ஏக்கர் நிலம் மற்றும் எனது நகைகள் அனைத்தையும் இழந்துவிட்டார். மேலும், அவரது நண்பர்களுடன் சேர்ந்து சூதாட்டத்தின்போது, என்னை அவர்களுக்கு பணயம் வைத்து பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்யவும் அனுமதியளித்துள்ளார்.  Viral Video: சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பலி.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..!

மேலும், அவர் எனக்கு தண்ணீர் கூட கொடுக்காமல், அவரது நண்பர்கள் இருக்கும் போது அடித்து துன்புறுத்தினார். இதனால், நான் எனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டேன். பின்னர், செப்டம்பர் 04-ஆம் தேதி, அவர் தனது நண்பர்களுடன் அங்கு வந்து என் விரலை உடைத்து என்னை வீட்டிற்கு வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்ல முயன்றார். அப்போது, அவர் என் ஆடைகளைக் கிழித்து தாக்கினார். அவருடைய நண்பர்களும் என்னை தாக்கினர்.

இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். எனவே, என் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் எனக்கு செய்த வன்கொடுமைகளை என்னால் வெளியில் சொல்ல முடியாது. அதை நான் நேரடியாக நீதிமன்றத்தில் கூறுகிறேன்' என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, ராம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.