Reservation: "தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு செல்லும்" - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வழங்கப்பட்ட தாழ்த்தபோட்டோருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

Supreme Court of India (Photo Credit: Wikipedia Commons)

ஆகஸ்ட் 01, புதுடெல்லி (New Delhi): வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயரிய எண்ணத்துடன் ஒன்றிணைந்த இந்தியாவில் உள்ள ஒவ்வொரு (Reservations in Govt Job & Education) சமூகமும் கல்வி, வேலைவாய்ப்பு உட்பட அனைத்து விசயங்களிலும் முன்னேற மத்திய-மாநில அரசுகளால் இடஒதுக்கீடு (Supreme Court Judgement on SC ST Sub Classify Reservation) கொண்டு வரப்பட்டது. அந்தவகையில், பட்டியலினத்தோர் & பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில், தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அருந்ததியினருக்கு என சிறப்பு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு திமுகவின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கான (Arunthathiyar Reservation) உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 4 Fishermen's Missing: இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்; நடுக்கடலில் 4 மீனவர்கள் மாயம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!

2019ல் நிராகரிப்பு:

இதேபோல மாநிலங்கள் உள் ஒதுக்கீடு வழங்க தனக்கு இருக்கும் அதிகாரம் கொண்டு அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடை வழங்கிய நிலையில், உச்சநீதிமன்றத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த 2019ம் ஆண்டு அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடை நிராகரித்து உத்தரவிட்டது. இதனால் மேல்முறையீடு செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் 7 நீதிபதிகளின் விசாரணை நடந்து வந்தது.

உள் ஒதுக்கீடை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்:

இன்று அந்த விசாரணை நிறைவுபெற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில், 6 பேர் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு வழங்குதலை உறுதி செய்தனர். அதாவது, "இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகள் பட்டியலினத்தவருக்கான உள் ஒதுக்கீடு வழங்கலாம். இந்திய அரசியலமைப்பு சாசனம் 14 வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை. இதனால் பட்டியலினத்தவருக்கான பிரிவில் உள்ள சமூகத்திற்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீடு என்பது செல்லும். பட்டியலினத்திலும் அனைத்து சமூகங்களின் நிலையும் ஒரே மாதிரி இருப்பதில்லை, அவர்களுக்கான உள் ஒதுக்கீடு வழங்குவதில் தடை இல்லை" தீர்ப்பளித்தனர்.