9 Years Of Seva: "வளர்ந்த இந்தியாவை உருவாக்க கடுமையாக உழைப்போம்" - பிரதமர் நரேந்திர மோடி உறுதி.!
இந்த நாளில் தொடர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு உழைப்போம் என பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
மே 30, புதுடெல்லி (New Delhi News): கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அமோக வெற்றியடைந்த பாஜக தலைமையிலான கூட்டணி, மத்தியில் ஆட்சியை ஏற்படுத்தியது.
மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கு காத்திருந்த மக்களும் பாஜகவுக்கு பெருவாரியாக வாக்களித்தனர். இந்த தேர்தலை தொடர்ந்து, அடுத்ததாக நடைபெற்ற 2019 தேர்தலிலும் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி அடைந்து ஆட்சியை ஏற்படுத்தியது. Dhoni Angry On Chahar: ஒரு கேட்ச் கூட ஒழுங்கா பிடிக்கலை; ஆட்டோகிராப் கேட்ட சாஹரை கண்டிப்புடன் விரட்டிய தல தோனி.!
இதனால் தொடர்ந்து 2வது முறையாக மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. பிரதமராக நரேந்திர மோடி பதவி வகித்து வருகிறார். 10 ஆண்டுகள் ஆட்சியில் 9 ஆண்டுகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. 2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்கள் கையில் இருக்கிறது.
9 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ள ட்விட் பதிவில், "9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நான் பணிவும் நன்றியுணர்வும் கொண்டுள்ளேன். நமது ஆட்சியில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும், செயலும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வழிநடத்தப்பட்டவை. வளர்ந்த இந்தியாவை உருவாக்க நாம் கடுமையாக உழைப்போம்" என கூறியுள்ளார்.