Sheikh Hasina (Photo Credit : @realzaidzayn X)

நவம்பர் 17, வங்கதேசம் (World News): வங்கதேச நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா (Sheikh Hasina) பணியாற்றி வந்தபோது அவரது அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இட ஒதுக்கீடு நடைமுறையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்துக்கு எதிராகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தி இருந்தனர். இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்த நிலையில், சுமார் 1400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 22,000 அதிகமானோர் காயமடைந்தனர். உயிரிழந்ததில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்று சொல்லப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி இந்த விஷயத்தை தீவிரமாக கையில் எடுத்தது. Bus Crash: சவூதி அரேபியா விபத்தில் 42 இந்தியர்கள் பலி.. புனித யாத்திரை பயணத்தில் சோகம்.!

மரண தண்டனை விதித்த நீதிமன்றம்:

அதனை தொடர்ந்து ஷேக் ஹசீனா நாட்டிலிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்த நிலையில், அங்கு அரசியல் பதற்றமான சூழ்நிலை நடைபெற்று வந்தது. இதனிடையே ஷேக் ஹசீனாவுக்கு எதிராக டாக்கா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் விசாரணையில் மாணவர்கள் உயிரிழப்பு காரணமாக இருந்த முன்னாள் பிரதமர் சேக் ஹசீனா மீது 3 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு அது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மரணம் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மனித உரிமைக்கு எதிராக குற்றம் அளித்ததாக ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: