PM Modi on Independance Day 2024: "2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா" - சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி.!
இந்தியா 2047 க்கு பின் வளர்ச்சியடைந்துவிடும் பட்சத்தில், அப்போது அரசின் தலையீடுகள் குறைந்துவிடும் என்பதால் மக்கள் தலைசிறந்த வாழ்க்கையை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஆகஸ்ட் 15, புதுடெல்லி (New Delhi): இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), 78 வது சுதந்திர தினத்தை (Independance Day 2024) முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து, பின் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவில் தற்போது நடப்பது பொற்காலம். இக்காலத்தை நாம் பயன்படுத்த வேண்டும். வளர்ச்சியடைந்த பாரத நாட்டில் அரசு நிர்வாகத்தில் அதிகபட்சம் தலையீடுகள் குறைந்துவிடும். விரைவில் நீதியை உறுதி செய்ய புதிய கிரிமினல் சட்டங்கள் அமல்படுத்தப்படும். ஒவ்வொரு ஊராட்சியில் 2 மாற்றங்களை கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். உலகின் வளர்ச்சிக்கு இந்திய அதிக பங்களிப்பை வழங்குகிறது.
உலகம் கவனிக்கும் விதம்:
நாட்டின் மக்கள் சாதி, மத, சமய வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து இருக்கிறார்கள். அதன் ஆடையாளமாக மூவர்ணக்கொடி பட்டொளி வீசி பறக்கிறது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். 2047 ல் வளர்ச்சியடைந்த இந்திய உருவாகும்போது அரசின் கடமைகள் குறைந்துவிடும். சாமானிய மக்களின் வாழ்க்கை எளிமையாகிவிடும். மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்கு செல்லாத நிலையை உருவாக்கி, இந்திய கல்வியின் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் உலகம் இந்தியாவை கவனிக்கும் விதம் பன்மடங்கு மாறி இருக்கிறது. Independence Day 2024: களைகட்டிய 78வது சுதந்திர தின கொண்டாட்டம்; வாழ்த்து அட்டைகள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இங்கே..!
சுயசார்பு இந்தியா:
பல்வேறு மொழிகள் இருப்பது நாட்டின் திறமைக்கு தடையாக அமையக்கூடாது. வளர்ந்த இந்தியாவில் இந்தியர்கள் ஆரோக்கியமானவர்களாக இருப்பார்கள். ஆர்கானிக் உணவுகளுக்கான தேவை உலகளவில் அதிகரித்துள்ள நிலையில், வரும் ஆண்டுகளில் ஆர்கானிக் உணவுகளின் முக்கிய மையமாக இந்தியா விளங்கும். கடந்த 10 ஆண்டுகளில் பெண்களை முன்னிலைப்படுத்தும் வளர்ச்சித்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து இருக்கிறது. பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பில் இந்தியா தனது தேவையை பூர்த்திசெய்யும் நிலையை விரைவில் எட்டிவிடும்.
ஒவ்வொரு விஷயத்திலும் இந்திய தரத்தை சர்வதேச தரமாக மாற்ற வேண்டும். நம்மிடம் திறமை உள்ளது, அதனை வைத்து தரத்தை உயர்த்துவோம். சர்வதேச அளவில் முதலீட்டாளர்களை உருவாக்க மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என பேசினார்.