PM Narendra Modi: புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியர்களின் பெருமை - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்; முழு பேச்சு விபரம் உள்ளே.!

செங்கோல் கடமையின் பாதையில் செல்ல வேண்டியதற்கான அடையாளம் ஆகும் என பிரதமர் பேசினார்.

Chozha's Sengol PM Narendra Modi (Photo Credit: ANI)

மே 28, நாடாளுமன்றம் (New Parilament India): மே 28 ம் தேதியான இன்று உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில், உலகிலேயே 4 வது மிகப்பெரிய பாராளுமன்றம் கட்டப்பட்டது திறக்கப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது கட்டப்பட்ட பழைய பாராளுமன்றத்திற்கு விடைகொடுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இன்று இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தை கட்டி திறந்து நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது.

கடந்த 2020-ல் ரூ.862 கோடி செலவில் 64,500 சதுர மீட்டர் பரப்பில் புதிய நாடாளுமன்றம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, உலகளவிலான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு விரைந்து கட்டி முடிக்கப்பட்டது. மே 28ம் தேதியான இன்று சோழர்களின் செங்கோல் தமிழ்நாட்டு ஆதீனங்கள் & சிவனடியார்கள் கைகளால் பெறப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியால் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டது.

PM Narendra Modi | New Parliament (Photo Credit: ANI)

இந்த நிகழ்ச்சியின் போது ரூ.75 சிறப்பு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அதனைத்தொடர்ந்து பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அந்த உரையில், "மே 28 வரலாற்றில் பொறிக்கப்பட்டு இருக்கும். இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க தருணம் இது. இந்தியர்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் புதிய நாடாளுமன்றம் இருக்கும். இந்த புதிய பாராளுமன்றம் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்கு சாட்சியாக இருக்கும். PM Modi on Adheenam: 75 ஆண்டுகளில் ஆதீனங்களை அங்கீகரித்த முதல் பிரதமர் நரேந்திர மோடி; மதுரை ஆதீனம் பெருமிதம்.!

75 வந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவிற்கு அளித்துள்ள பரிசே புதிய நாடாளுமன்றம். புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டிடம் அல்ல, 140 கோடி இந்திய மக்களின் லட்சியத்தின் சின்னம். இது இந்தியாவின் உறுதியைப் பற்றிய செய்தியை உலகிற்கு வழங்குகிறது

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் அழியாத சில தருணங்கள் வருகின்றன. மே 28 அத்தகைய நாள். இந்தியா முன்னேறினால் உலகமும் முன்னேறும். பாராளுமன்றத்தில் புனித 'செங்கோல்' இன்று நிறுவப்பட்டது. சோழ வம்சத்தில், செங்கோல் நீதி மற்றும் நல்லாட்சிக்கு அடையாளமாக இருந்தது.

Madurai Adheenam Sri Harihara Desika Swamigal | Prime Minister Narendra Modi (Photo Credit: ANI)

தமிழ்நாட்டில் இருந்து வந்து ஆசி வழங்கி செங்கோலை அளித்த ஆதீனங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். செங்கோல் கடமையின் பாதையில் செல்ல வேண்டியதற்கான அடையாளம் ஆகும். நாம் புனிதமான செங்கோலை மீட்டெடுத்தது நமது அதிஷ்டம் ஆகும். PM Narendra Modi About Sengol: செங்கோலை பெற்று புதிய உத்வேகத்துடன் பேசிய பிரதமர் மோடி; நடுநடுங்கப்போகும் எதிரிகள்..!

செங்கோல் அவை தொடக்கத்தின் போது நம்மை ஊக்குவிக்கும். ஜனநாயகம் என்பது அமைப்பு மட்டுமல்லாது, மாண்பு ஆகும். தமிழ்நாட்டின் செங்கோல் நம்மை எப்போதும் ஊக்குவிக்கும். உலக நாடுகள் இந்தியாவை மரியாதையோடு பார்க்கிறது. ஒவ்வொரு இந்தியர்களும் புதிய பாராளுமன்றத்தை கண்டு பெருமையடைகிறார்கள்.

PM Modi Went to Get Sengol (Photo Credit: ANI)

புதிய நாடாளுமன்றம் தேசிய சின்னத்தை பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடமும் உலக முன்னேற்றத்திற்கு பங்களிக்கும். இந்தியா ஜனநாயகத்தின் தாய். இது உலக ஜனநாயகத்தின் அடித்தளமும் கூட. ஜனநாயகம் என்பது நமது யோசனை மற்றும் பாரம்பரியம் ஆகும்.

இந்தியா வலிமையான நாடு என்பதை புதிய பாராளுமன்றம் பிரதிபலிக்கும். புதிய பாராளுமன்றம் காலத்தின் தேவையாக உள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனம், கலாச்சாரம் இணைகிறது. இந்தியாவின் பெருமையை பல ஆண்டுகளாக அந்நியரின் ஆட்சிகள் பறித்து சென்றன. Parliament India: உலகிலேயே 4வது மிகப்பெரிய பாராளுமன்றத்தை கொண்ட இந்தியா; 105 ஆண்டுகள் கழித்து சாதனை படைத்த இந்தியா.!

இன்று காலனித்துவ மனநிலை என்பது இந்தியாவை விட்டு வெளியேறி இருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக தனது அரசு ஏழைகளின் வளர்ச்சிக்காக பணியாற்றியது. 9 ஆண்டுகளில் 4 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. நாடு & மக்களின் வளர்ச்சியே அரசின் செயல்திட்டம் ஆகும்.

Prime Minister Narendra Modi (Photo Credit: ANI)

இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு இந்தியரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக நாம் மாற்ற வேண்டும். தேசம் தான் முதன்மை என்ற எண்ணம் மனதில் இருந்தால், அவைக்கேற்ப நாம் முன்னேறி பயணிக்க வேண்டும்.

புதிய பாராளுமன்றத்தின் தேவை என்பது இங்கு இருந்தது. இனிவரும் காலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதனால்தான் புதிய பாராளுமன்றம் உருவாக்கப்படுவது ஆகும். இந்தியாவின் வளர்ச்சி பயணம் பிற நாடுகளுக்கு ஊக்கமளிக்கும். Rajinikanth Thanks PM Narendra Modi: தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பாரத் பிரதமருக்கு நன்றி – செங்கோலை பெற்ற பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி..! 

PM Get Sengol | Rajinikanth (Photo Credit: ANI / Wikipedia Commons)

புதிய பாராளுமன்ற கட்டிடம் நவீன வசதிகள் மற்றும் சமீபத்திய தொழிநுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள்ளது. இதன் மூலம் 60,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களின் கடின உழைப்பை போற்றும் வகையில் டிஜிட்டல் கேலரியை நாம் உருவாக்கியுள்ளோம். புதிய பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில் ஆகும்" என பேசினார்.