Narendra Modi Speech Parliament: அமளிகளுக்கு நடுவே அதிரடியாய் பேசிய பிரதமர் மோடி.. காங்கிரஸ், திமுக கட்சிகள் மீது பரபரப்பு விமர்சனம்.!
இந்தியாவே எனக்கு எதிரானவர்களை நான் எப்படி சந்திக்கிறேன் என பார்த்துக்கொண்டு இருக்கிறது. 60 ஆண்டுகளை வீணடித்த காங்கிரசை மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன என பிரதமர் மோடி அமளிகளுக்கு நடுவே அதிரடியாக பேசினார்.

பிப்ரவரி 09, நாடாளுமன்றம்: இந்திய நாடாளுமன்றத்தில் (Parliament) குடியரசு தலைவரின் உரையை (President Address) தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் (Budget Session 2023-24) நடைபெற்றது. அதன்பின், பட்ஜெட் மீதான விவாதங்களும் நடைபெற்றன. கடும் அமளிக்கு நடுவே தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் (Lok & Rajya Sabha) செயல்பட்டு வருகின்றன. Budget Session 2023-24 Tamil: மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?.. முழு விபரம் உள்ளே..!
இந்த நிலையில், குடியரசு தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி (Prime Minister) பல விஷயங்களை மேற்கோளிட்டு உரையாற்றினார். அப்போது, எதிர்க்கட்சிகள் அதானி (Adani Issue), எல்.ஐ.சி (LIC), தனியார்மயமாக்கல் உட்பட பல விவகாரங்களை கையில் எடுத்து அமளி செய்தன.
அந்த அமளிகளுக்கு நடுவே பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) பேசுகையில், "இந்தியாவின் நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டறிவதில், காங்கிரஸ் (Congress) கட்சியை போல நாங்கள் ஓடி ஒளிந்துவிடவில்லை. எதிர்க்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களுடைய செயல்பாடுகள் தேசத்தின் நலனை பாதிக்கும் வகையிலேயே இருக்கிறது.

எங்களின் மீது சேற்றை நீங்கள் வீசி எரிந்தாலும், அதில் கட்டாயம் தாமரை (Lotus) மலருவதை எவராலும் தடுக்க இயலாது. கடந்த 60 ஆண்டுகளை வீணடித்து வந்த காங்கிரசை மக்கள் (People Rejects Congress) நிராகரித்துவிட்டார்கள். இதனை ஒவ்வொரு தேர்தல் முடிவும் எடுத்துரைக்கிறது. North Korea ICBM Missile: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகளை வெளி உலகிற்கு காட்சிப்படுத்திய வடகொரியா.. அதிர்ச்சியில் உலக நாடுகள்.!
ஒரு முறையல்ல இரண்டு முறை ஆட்சியை கலைத்த காங்கிரசுடன் திமுக (DMK) கூட்டணி வைத்துள்ளது எதற்காக?. எம்.ஜி.ஆர் (M.G. Ramachandran)., கருணாநிதி (Karunanidhi) போன்ற அரசியல் தலைவர்களின் ஆட்சியை கலைத்த நிகழ்வுகளை நாடு மறக்குமா?. நான் தனியொரு ஆளாக எத்தனை பேரை எதிர்கொண்டு இருக்கிறேன் என இந்தியாவே (India) பார்த்துக்கொண்டு இருக்கிறது.
இந்தியாவின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விஷயத்தில் மத்திய பாஜக (Central BJP Govt) உறுதியுடன் இருக்கிறது என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். 11 கோடி குடும்பத்திற்கு குடிநீர் விநியோகம் செய்துள்ளோம். காங்கிரஸ் தலைமையிலான அரசு எவ்வித சவாலையும் சந்திக்காது என்பதை கடந்த கால செயல்பாடுகள் உணர்த்தி இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் எப்படியான முழக்கத்தை முன்வைத்தாலும், அவதூறுகளை தொடர்ந்து பரப்பினாலும், சாமானிய மக்களுக்கு நாங்கள் வழங்கும் எங்களின் பணி, எனது பணி தொடரும்" என பேசினார்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 09, 2023 07:59 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)