Shantiniketan in World Heritage List: ரவீந்திரநாத் தாகூரின் இல்லம் (சாந்திநிகேதன்) உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் இடம்பெறுகிறது: யுனெஸ்கோ அறிவிப்பு.!
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் இவர் நிறுவிய சாந்தி நிகேதனை, யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது.
செப்டம்பர் 18, கொல்கத்தா (West Bengal News): சாந்திநிகேதன்,1901-ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் புகழ்பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் (Rabindranath Tagore) தொடங்கப்பட்டது. மதம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை தாண்டி மனிதர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் சாந்திநிகேதன் (Shantiniketan) நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் பள்ளியாக செயல்பட்டுக் கொண்டிருந்த சாந்திநிகேதன், 1921-ஆம் ஆண்டு சர்வதேச பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டு விஸ்வபாரதி (vishwa Bharati) பல்கலைக்கழகம் என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்டது.
ரவீந்திரநாத் தாகூர் ஜெயந்தியை முன்னிட்டு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி (G.Kishan Reddy), யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் சாந்தி நிகேதனை சேர்ப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். Reno Airshow Accident: நடுவானில் மோதிக்கொண்ட 2 விமானங்கள்; போட்டியில் நடந்த பயங்கரம்.. விமானிகள் பரிதாப பலி.!
இந்நிலையில் நேற்று, சவுதி அரேபியாவில் (Saudi Arabia) நடைபெற்ற யுனெஸ்கோவின் கலந்தாய்வு கூட்டத்தை தொடர்ந்து, யுனெஸ்கோ தனது ட்விட்டர் பக்கத்தில் உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில், இந்தியாவில் உள்ள சாந்தி நிகேதன் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பதாக அறிவித்தது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழமை வாய்ந்த இந்த கட்டிடம், ஆசியாவின் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நாட்டுப்புற ஓவியங்களை கொண்டது. மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee), கடந்த 12 ஆண்டு காலமாக சாந்தி நிகேதனின் கட்டமைப்பை வங்காள அரசு மேம்படுத்தியதாகவும், இப்போது சர்வதேச அளவில் சாந்தி நிகேதனுக்கு கிடைத்த அங்கீகாரம் வங்காளத்திற்கும், கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்கும் தாக இருக்கும் கிடைத்த பெருமை என்று கூறி இருக்கிறார்.