
செப்டம்பர் 18, வாஷிங்க்டன் டிசி (World News): அமெரிக்காவில் உள்ள நெவேடா மாகாணம், ரெனோ நகரில் வைத்து தேசிய அளவிலான விமான போட்டிகள் நடைபெற்று இருக்கின்றன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று மதியம் 02:15 மணியளவில் T6 தங்க போட்டி பிரிவில் 2 விமானங்கள் போட்டியில் ஈடுபட்டு இருக்கின்றன. Minor Boy Death: எருக்கம்பூ பறிக்கச்சென்ற சிறுவன் சேற்றில் சிக்கி பரிதாப பலி; பெற்றோர்களே மழைநாட்களில் கவனம்.!
அப்போது, இரண்டு விமானங்களும் நடுவானில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானிகள் இருவரும் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், விமானிகளின் மரணத்தை உறுதி செய்தனர். இந்த போட்டியில் ஈடுபட்ட Nica Macy மற்றும் Chris Rushing ஆகிய விமானிகள் மரணம் அடைந்துள்ளனர்.
இதனால் எதிர்வரும் விமான போட்டிகள் அனைத்தையும் நிறுத்தியுள்ள நிர்வாகத்தினர், சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் முன்பு விமான விபத்து அரங்கேறியது.
இந்த விமான விபத்தில் உயிரிழந்திருக்கிற விமானிகள் இருவரும் மிகுந்த அனுபவத்திறன் கொண்ட போட்டியாளர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.