SJ Suryah, Sai Pallavi, Anirudh Ravichandar Kalaimamani Awards (Photo Credit: @B_RAJA_ @anirudhofficial @PallaviAlwayz X)

செப்டம்பர் 24, சென்னை (Chennai News): தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் வழங்கப்படும் கலைமாமணி விருதுகள் (Kalaimamani Awards 2021 to 2023 List) தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திரைத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், நடன இயக்குனர்களுக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்டோபர் மாதத்தில் வழங்குகிறார். பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி ஆகியோரின் பெயர்களில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் பட்டியலும் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில், விருது பெறப்போகும் நபர்களின் விபரம் குறித்த தகவலை பின்வருமாறு பார்க்கலாம். 71st National Film Awards: மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது.. சாதனை படைத்த பார்க்கிங் படம்.. 71வது தேசிய திரைப்பட விருதுகள் விபரம் இதோ.! 

2021ம் ஆண்டு கலைமாமணி விருதுகள் (Kalaimamani Awards 2021):

நடிகர் எஸ்ஜே சூர்யா

நடிகை சாய் பல்லவி

இயக்குனர் லிங்குசாமி

சண்டைப்பயிற்சி இயக்குனர் சூப்பர் சுப்புராயன்

கே.ஜி.ஏ யேசுதாசுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது

2022ம் ஆண்டு கலைமாமணி விருதுகள் (Kalaimamani Awards 2022):

நடிகர் விக்ரம் பிரபு

பாடலாசிரியர் விவேகா

டைமண்ட் பாபு

வி.சி. குகநாதன்

டி. லட்சுமிகாந்தன்

2023ம் ஆண்டு கலைமாமணி விருதுகள் (Kalaimamani Awards 2023):

இசையமைப்பார் அனிருத்

பாடகி ஸ்வேதா மோகன்

நடிகர் மணிகண்டன்

நடிகர் ஜார்ஜ் மரியான்

நடன கலைஞர் சாண்டி மாஸ்டர்

நிகில் முருகன்