Hospital Fire Accident: அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. ICU-வில் 8 பேர் உடல்கருகி பலி.!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்மான் சிங் அரசு மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் (Jaipur Hospital Fire Accident) 8 பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jaipur SMS Hospital Fire Accident (Photo Credit : @ANI X)

அக்டோபர் 06, ஜெய்ப்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்மான் சிங் (Sawai Man Singh Government Hospital)அரசு மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் சவாய்மான் சிங் அரசு மருத்துவமனை மாநிலத்தின் முக்கிய சிகிச்சை மையங்களில் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் இந்த மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

மருத்துவமனையில் பற்றி எரிந்த தீ :

கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்த தீ சில நிமிடங்களில் மருத்துவமனை முழுவதும் பரவிய நிலையில், சிகிச்சைப் பெற்று கொண்டிருந்த நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயன்றனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. Cough Syrup Advisory: 12 குழந்தைகளின் இறப்புக்கு இருமல் மருந்து காரணமா?.. பெற்றோர்களே கவனம்.!

8 பேர் உடல்கருகி மரணம் :

இதனிடையே தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உட்பட 8 பேர் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த தீ விபத்தால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பல விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

தீ விபத்திற்கு மின்கசிவு காரணமா?

இதனை தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், மருத்துவமனை ஊழியர்கள் தீ விபத்து குறித்து எந்த ஒரு முன்னறிவிப்பும் அளிக்கவில்லை. நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தீ அணைக்கும் கருவிகள், சிலிண்டர்கள் இல்லாததும் தீ விரைவாக பரவியதற்கு காரணம் என குற்றம் சாட்டினார்.

முதல்வர் உத்தரவு :

இதன் காரணமாக மாநில மருத்துவக் கல்வித் துறை ஆணையர் இக்பால் கான் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார். தீ விபத்திற்கான காரணங்கள், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம், நோயாளிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து குழு விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உதவிடப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட பின் மருத்துவமனையின் நிலை :

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement