Loan Option in UPI: இனி செலவு பற்றிய கவலை வேண்டாம்- யூபிஐ மட்டும் இருந்தால் போதும்: ஆர்பிஐ- இன் அட்டகாசமான அறிவிப்பு.!

நாடு முழுவதும் யுபிஐ செயலிகளின் பயன்பாடு பெருகி இருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி, யுபிஐ மூலம் கடன் பெறும் வசதியை அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்திருக்கிறது.

Reserve Bank of India/ UPI(Photo Credit: Wikipedia)

செப்டம்பர் 6, டெல்லி (India News): இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் யுபிஐ (UPI) தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. சர்வதேச அளவில் யுபிஐ அதிகம் பயன்படுத்தப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் யுபிஐ செயலிகளின் பயன்பாடு உச்சத்தை அடைந்திருக்கிறது.

நாடு முழுவதிலும் ஆன்லைன் வர்த்தகம் (Online Tansactions) அதிகமாகிவிட்ட காரணத்தால் சில நேரங்களில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் போதும்  பெரும்போதும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று ஆர்பிஐ (Reserve Bank of India)பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. Jenmashtami Special: கோகுலாஷ்டமியின் சிறப்புகள்: தத்துவம் உணர்ந்து கிருஷ்ணனை வழிபடுவோம்.!

யுபிஐ பயன்படுத்துவதால் நேரம் நேர விரையம் குறைந்துவிட்டதாக பலரும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஏடிஎம்-இல் (ATM) பணம் எடுக்க தேவையில்லை,  மற்றும்  சில்லறை கொடுக்கும்  பிரச்சனையும் இல்லை. சின்ன சின்ன பொருட்கள் வாங்குவதில் இருந்து தொடங்கி மாதாந்திர பில் கட்டணங்கள் (Bill Payments) வரை அனைத்திற்கும் யுபிஐ பயன்படுகிறது.

இந்நிலையில், யுபிஐ (Google Pay, Phone Pe, PayTM) மூலம் கடன் பெறும் வசதியை ஆர்பிஐ அறிமுகப்படுத்த உள்ளது. யுபிஐ செயலிகளில் ப்ரீ அப்ரூவ்ட் லோன் ஆப்ஷன் (Pre Approved Loan) இணைக்கப்படும் என்று ஆர்பிஐ அறிவித்திருக்கிறது. இதன் மூலம் யுபிஐ செயலிகளின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now