Birth & Death Amendment Act 2023: பிறப்பு சான்றிதழ் வைத்தும் ஓட்டுநர் உரிமம், திருமண பதிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்திருத்த மசோதா 2023-ன் வாயிலாக, அக்டோபர் மாதம் 01ம் தேதி முதல் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 14, புதுடெல்லி (New Delhi): எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு, அவ்வப்போது மத்திய அரசு உட்கட்டமைப்பு ரீதியிலான விஷயங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதேபோல, மக்கள் தங்களுக்கு தேவையான அரசின் ஆவணங்களை குறுகிய காலத்தில் பெறுவதற்கான வழிமுறைகளையும் தொடர்ந்து அறிவித்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு பிறப்பு சான்றிதழை ஒரே ஆவணமாக பயன்படுத்த அனுமதி வழங்கி இருக்கிறது. இதன் வாயிலாக பிறப்பு சான்றிதழை மட்டும் பயன்படுத்தி கல்வி நிறுவனத்தில் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது, ஓட்டுநர் உரிமம் வழங்குவது, வாக்காளர் பட்டியல் தயாரிக்க வின்படிப்பது, ஆதார் பதிவு செய்வது, திருமணம் பதிவு செய்வது போன்றவற்றுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Income Scheme for Women: தமிழக அரசின் மகளிர் உரிமை திட்டம்: விடுபட்டவர்கள் மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.! விபரம் இதோ..!
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்திருத்த மசோதா 2023-ன் வாயிலாக, அக்டோபர் மாதம் 01ம் தேதி முதலாக இந்நடைமுறை அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.