Robber Arrested: வீடு வீடாக சென்று திருடிய புறா கொள்ளையன் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
கர்நாடகாவில் புறாக்களை வைத்து நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.
அக்டோபர் 11, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூரு மாநகரத்தில் (Bengaluru) புறாக்களை (Dove) ஏவி நூதன முறையில் கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நூதன முறையில் சிக்காமல் கொள்ளையடித்து வந்த மஞ்சுநாதன் (வயது 38) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். Bomb Threat: லண்டன்-டெல்லி விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அடுத்து நடந்தது என்ன..?
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், புறாக்களை பயன்படுத்தி நூதன முறையில் கொள்ளையை (Theft) அரங்கேற்றி வந்த தகவலை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். சென்சிடிவ்வான உணர்திறன் கொண்ட புறாக்கள் பொதுவாக அருகில் ஆட்கள் வந்தால் உடனே பறந்து விடும் தன்மை கொண்டது. புறாக்களின் இந்த தன்மையை பயன்படுத்தி கொள்ளையடிக்க திட்டமிட்ட மஞ்சுநாதன், ஒவ்வொரு முறை கொள்ளையடிக்க செல்லும்போதும், தன்னுடன் புறாக்களை எடுத்துச் செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் முன் வீடுகளை நோட்டமிடும் மஞ்சுநாதன், ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டின் மீது 2 புறாக்களை பறக்க விடுவார். அவை பெரும்பாலும் கூரை அல்லது பால்கனிக்கு பறந்து சென்று அமர்ந்து சத்தமிடும். அப்போது, வீட்டுக்குள் ஆட்களின் நடமாட்டம் இருந்தால் உடனே அது பறந்து விடும்.
அதே சமயம் வீட்டிற்குள் ஆட்கள் இல்லையென்றால், அங்கேயே வெகுநேரம் அமர்ந்திருக்கும். இதை வைத்து வீட்டுக்குள் ஆட்கள் இல்லை என்பதை தெரிந்துகொண்டு, தான் கையோடு எடுத்து வரும் இரும்பு ராடைக் கொண்டு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்து வந்துள்ளார். இவ்வாறு, சுமார் 50 வீடுகளில் கொள்ளைடித்து காவல்துறையினரிடம் சிக்காமல் மஞ்சுநாதன் தப்பித்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.