Crypto Currency: கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?... நொடியில் இலட்சாதிபதியும் ஆகலாம், தெருக்கோடியில் நிற்கலாம்.. காரணம் என்ன?.!

ஆனால், இன்றளவில் தொழிலதிபர்கள் முதல் பல முக்கியமான நபர்கள் வரை என கிரிப்டோ கரன்சியை உபயோகம் செய்கிறார்கள்.

Template: Crypto Currency Victory & Loss

டிசம்பர், 10: கிரிப்டோ கரன்சி (Crypto Curreny) என்பது உலக அளவில் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. முந்தைய காலங்களில் பிட்காயின் கிரிப்டோ கரன்சி போன்றவை சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களால் அதிகளவு பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது உள்ள நிலையில் தொழிலதிபர்கள் முதல் பல முக்கியமான நபர்கள் வரை என கிரிப்டோ கரன்சியை உபயோகம் செய்கிறார்கள்.

இந்தியாவில் கிரிப்டோ (Crypto India): மத்திய அரசும் கிரிப்டோ கரன்சி பயன்பாடு குறித்த முடிவுகளை எடுத்து, கிரிப்டோ கரன்சியில் இருந்து கிடைக்கும் வருவாயில் 30% வரி விதித்து கிரிப்டோ கரன்சியை உபயோகம் செய்ய அனுமதி செய்கிறது. பல நாடுகள் கிரிப்டோ கரன்சியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், சில நாடுகள் அதனை கட்டுப்பாடுகளோடு ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்தியாவில் கிரிப்டோ கரன்சி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்புவரை பல சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது. மேலும், ஹேக்கர்கள் பணத்தை திருடி உல்லாசமாக செலவு செய்து வந்தனர். இன்றுள்ள சில கட்டுப்பாடுகளின் காரணமாக அவை தவிர்க்கப்பட்டாலும் முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் என்னவோ சொந்த முயற்சிதான்.

கிரிப்டோ கரன்சியை பொறுத்தவரையில் அதன் பங்குச் சந்தை முதலீடுகள் அனைத்தும் உலகளாவிய வர்த்தகம் கொண்டது என்பதால், அதன் மதிப்பு கூடுதலாகவே இருக்கும். ஆனால், அதில் சரிவு ஏற்பட்டால் ஒட்டுமொத்தமாக நமது மொத்த முதலீடும் நொடியில் மறைந்து போகும். அங்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். Gray Hair Solution: அச்சச்சோ.. உங்களுக்கு தலைமுடி நரை விழுந்துவிட்டதா?.. என்ன காரணம்?.. தீர்வு இவ்வுளவு எளிதா?.! 

Crypto Currency Bitcoin

கிரிப்டோ கரன்சி: நமது கைகளில் நாம் அன்றாடம் உபயோகம் செய்து வரும் ரூபாய் நோட்டுகளை போல, நாணயங்கள் போன்ற வடிவில் இருக்கும் கரன்சிகளை கிரிப்டோ கரன்சி என்று அழைக்கிறார்கள். இவை அனைத்து நாடுகளிலும் செல்லத்தக்கதாகும். இதற்கு இணைய வழியில் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டில் உலக அளவில் பிட்காயின் (Bitcoin) முதன்முதலாக உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்த பிட்காயினை உருவாக்கியவர் யார்? எப்படி உலகளவில் பரவியது? என்பது இன்றுவரை தெரியாத மர்மமாக இருந்தாலும், இன்றளவில் மிகப்பெரிய அளவில் நெட்ஒர்க்கை வளர்த்துக் கொண்டது.

இது வங்கி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அப்பாற்பட்டது என்றும் கூறலாம். பிட்காயின், ட்ரான் என 2000க்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகள் இருந்தாலும், அவற்றில் பிட்காயின் முதலிடத்தை பெறுகிறது. பணம் கொடுக்கல், வாங்கல், முதலீடு செய்வது போன்ற விஷயங்களில் நம்பகத்தன்மை, சைபர் செக்யூரிட்டி அனுபவம் போன்றவை அதிகம் வேண்டும்.

நொடியில் மாற்றம்: நாம் பார்க்கும் நேரத்தில் ஒரு பிட்காயின் விலை ரூபாய் 47 லட்சம் என்றால், அது அடுத்த நொடியே தலைகீழாகவும் மாறலாம். அதை கணிக்க முடியாது. முதலீட்டாளர்களுக்கு கிரிப்டோ கரன்சியை பொறுத்தவரையில் அவர்களின் அனுபவம் மற்றும் கணிப்பு தான் கைகொடுக்கும்.

கவனம் தேவை (Warning): கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும் போது, அதனை ஹேக்கர்கள் திருட எக்கசக்க வாய்ப்புகள் உள்ளன என்பதால் அதிக கவனம் தேவைப்படும். நாம் முதலீடு செய்யும் கிரிப்டோ கரன்சியை பிட்காயினை போல பல கரன்சிகள் இருக்கின்றன. இவற்றின் விலை எப்போதும் நிரந்தரம் இல்லை. சரிவை சந்தித்தால் பட்டை நாமம் தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆபத்தான வேலையில் நீங்கள் கால் வைக்க நினைத்தால் அதன் வெற்றி/தோல்வி உங்களையே சாரும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 06:33 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).