Head Constable Arrested: ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர்; கையும் களவுமாக பிடித்த விஜிலென்ஸ் குழு..!
உத்தர பிரதேசத்தில் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் விஜிலென்ஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 10, கான்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் (Kanpur) உள்ள பாபுபூர்வா ஏசிபி அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்ட தலைமைக் காவலர் (Head Constable) ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக விஜிலென்ஸ் (Vigilance) குழுவினரால் கைது செய்யப்பட்டார். கான்பூரில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்கில், தலைமைக் காவலர் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ரூ. 20,000 லஞ்சம் (Bribe) கேட்டுள்ளார். பாதிக்கப்பட்டவரால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாததால், 15 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், விஜிலென்ஸ் துறையை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். IIT Student Dies By Suicide: ஐஐடி விடுதியில் மாணவர் சடலமாக மீட்பு.. சக மாணவர்கள் திடீர் போராட்டம்..!
புகாரின்பேரில், விஜிலென்ஸ் குழுவினர் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் ஷாநவாஸ் கானை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். அவர் எதிர்ப்பு தெரிவித்து தப்பி ஓட முயன்றபோது, மடக்கி பிடித்து விஜிலென்ஸ் துறையினர் அவரை கைது செய்தனர். மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தலைமைக் காவலர் கைது செய்யப்பட்ட வீடியோ: