'Wagh Nakh' Weapon Reached India: 'வாக் நாக்' ஆயுதம் இந்தியா வருகை; பல முயற்சிகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி..!

சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய 'வாக் நாக்' ஆயுதம் பலத்த பாதுகாப்புடன் லண்டனில் இருந்து மும்பைக்கு வந்தடைந்துள்ளது என மாநில கலாச்சார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Wagh Nakh Weapon (Photo Credit: @chmnaidu X)

ஜூலை 18, மும்பை (Maharashtra News): சத்ரபதி சிவாஜி (Chhatrapati Shivaji) பயன்படுத்திய 'வாக் நாக்' அல்லது புலி நகம் வடிவ ஆயுதம் லண்டன் அருங்காட்சியகத்தில் இருந்து மும்பைக்கு நேற்று (ஜூலை 17) கொண்டு வரப்பட்டதாக மாநில கலாச்சார அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளார். இந்த வாக் நாக் (Wagh Nakh)ஆயுதம் இப்போது மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள சதாராவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் அங்கு ஜூலை 19-ஆம் தேதி முதல் காட்சிக்கு வைக்கப்படும் எனவும் அவர் கூறினார். ITT Vs DD Highlights: திண்டுக்கல் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி; சுபோத் பாத்தி அபார பந்துவீச்சு..!

மாநில கலால் துறை அமைச்சர் ஷம்புராஜ் தேசாய் கூறுகையில், 'லண்டனில் இருந்து பலத்த பாதுகாப்புடனும், ஆயுதத்தில் குண்டு துளைக்காத கவசம் உள்ளதாகவும், இந்த ஆயுதம் 7 மாதங்களுக்கு சதாராவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சதாராவின் பாதுகாவலர் அமைச்சராகவும் இருக்கும் தேசாய், கடந்த ஜூலை 16-ஆம் தேதி அன்று மாவட்டத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி சங்க்ரஹாலேயில் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

லண்டனில் உள்ள அருங்காட்சியகம் முதலில் ஒரு வருடத்திற்கு ஆயுதத்தை வழங்க ஒப்புக்கொண்டது. ஆனால், மாநில அரசாங்கம் அதனை 3 ஆண்டுகளுக்கு மாநிலத்தில் காட்சிக்காக ஒப்படைக்கும்படி வலியுறுத்தியது என்றார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசின் வெற்றிகரமான பல முயற்சிகளுக்குப் பிறகு, மகாராஷ்டிராவுக்கு 'வாக் நாக்' கொண்டு வரப்படுகிறது' என்று தேசாய் நெகிழ்ச்சியுடன் கூறினார்.