Woman Gang Rape: சுற்றுலா சென்ற புதுமண தம்பதி; மரத்தில் கட்டி வைத்து கணவன் கண்முன்னே மனைவி கூட்டு பாலியல் பலாத்காரம்..!

மத்திய பிரதேசத்தில் புதுமண தம்பதி சுற்றுலா சென்ற இடத்தில், கணவன் கண்முன்னே மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gang Rape (Photo Credit: Pixabay)

அக்டோபர் 26, ரேவா (Madhya Pradesh News): மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த புதுமண தம்பதி, ரேவா மாவட்டத்தில் (Rewa) உள்ள பைரவ் பாவா கோவிலுக்கு கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, அப்பகுதியில் மது போதையில் இருந்த 8 பேர், இத்தம்பதியரைச் சுற்றி வளைத்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். Big News: மழலையர் பள்ளிப் பேருந்து மீது சரமாரியாக துப்பாக்கிசூடு; ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் தப்பிய உயிர்கள்.! நாடே பதற்றம்.!

இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவரை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து தாக்கி, அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதன் பிறகு, அந்த 19 வயது இளம்பெண்ணை அவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை (Gang Rape) செய்து, அதனையும் வீடியோ எடுத்து, இதுகுறித்து வெளியே யாரிடமாவது சொன்னால், வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி இதுதொடர்பாக காவல்நிலையத்தில் தம்பதி புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், இதுவரை 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement