அக்டோபர் 25, அம்ரோகா (Uttar Pradesh News): உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோகா (Amroha Gun Fire) மாவட்டம், கஜ்ரௌலா பகுதியில் எஸ்ஆர்எஸ் என்ற தனியார் மழலையர் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக நிர்வாகத்தின் சார்பில் சிற்றுந்து வாகன சேவையும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
வாகனம் (School Bus Gun Fire) மீது துப்பாக்கிசூடு:
இதன் வாயிலாக மாணவி-மாணவிகள் தினமும் பள்ளியின் வாகனத்தில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று காலை பள்ளிக்கு சிறார்கள் அழைத்துவரப்பட்டனர். அப்போது மர்ம கும்பல் பள்ளி வாகனத்தை நடுவழியில் தடுத்து நிறுத்தி துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஓட்டுநரின் சாதுர்ய செயலால், மாணவ-மாணவிகள் எந்த விதமான காயமும் இன்றி உயிர்தப்பினர். Zeeshan Siddiqui: தந்தை இறந்ததும் கட்சி தாவிய மகன்; மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பம்.!
காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு:
தகவல் அறிந்து அந்த காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியது யார்? எதற்காக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. துப்பாக்கிசூடு சம்பவத்தால் அப்பகுதியில் லேசான பரபரப்பு தொற்றிக்கொண்டதைத்தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குவியும் பாராட்டுக்கள்:
3 பேர் கும்பலால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதும், ஓட்டுநர் சாதுர்யமாக வாகனத்தை விரைந்து காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளார். இதனால் மிகப்பெரிய உயிரிழப்பு விஷயம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஓட்டுனரின் செயலுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட வாகனத்தை காவலர்கள் சோதனையிடும் காட்சி:
#अमरोहा। ब्लॉक प्रमुख वीरेंद्र सिंह के स्कूल की बस पर फायरिंग का मामला ।SRS स्कूली मिनी बस पर बदमाशो ने की फायरिंग,बाइक सवार 3 बदमाशो ने की फायरिंग,बच्चो में मची चीख पुकार,बस चालक बस को लेकर थाने पहुंचा।थाना गजरौला क्षेत्र का मामला।@Uppolice @amrohapolice #Amrohanews #UPNews… pic.twitter.com/SO4nBcZkLc
— Global Bharat News (@Global__Bharat) October 25, 2024