Wild Elephant Into The Well: கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை; மீட்புப் பணிகள் தீவிரம்..! - வனத்துறை அதிகாரி தகவல்..!

Wild Elephant (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 12, கொச்சி (Kerala News): கேரள மாநிலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள், அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவிக்கின்றன. இதற்கு, மனித உயிர்களும் பலியாகியுள்ள சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Aavaram Flower Recipe: ஆவாரம்பூ கூட்டு செய்வது எப்படி..? – விவரம் உள்ளே..!

இந்நிலையில், கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம், கொத்தமங்கலம் வனப்பகுதி அருகே தனியார் ரப்பர் தோட்டம் ஒன்று உள்ளது. அதில், காட்டு யானை (Wild Elephant) ஒன்று உள்ளே சென்றுள்ளது. அப்போது, அங்குள்ள கிணற்றில் யானை தவறி விழுந்துள்ளது. இதுகுறித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர், கிணற்றுக்குள் விழுந்த யானையை எப்படி மீட்பது என்பது பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் இல்லாத காரணத்தால் யானை தவறி விழுந்துள்ளது என்றும், யானையை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.