Pahalgam Terror Attack: அடுத்தகட்ட நடவடிக்கை.. ஜம்மு காஷ்மீரில் அதிரடி காட்டும் இந்தியா..!
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தீவிர பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
ஏப்ரல் 29, பஹல்காம் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் (Pahalgam Terrorist Attack) பகுதியில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையே, நாளுக்குநாள் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. Hashim Musa: பாகிஸ்தான் ராணுவத்தில் பணி.. பஹல்கம் தாக்குதல் பயங்கரவாதி குறித்து அதிர்ச்சி தகவல்.!
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்:
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தீவிர பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இந்திய ராணுவம் மற்றும் மாநில காவல்துறையினர் இணைந்து பயங்கரவாதத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாத அமைப்பு மற்றும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் நபர்கள் குறித்த முழு விவரங்களை சேகரித்து கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்:
Intense counter-terrorism operations are underway at various places in J&K. No specific updates are being shared as of now: Sources tell ANI pic.twitter.com/2ZNtPDF0Iy
— ANI (@ANI) April 29, 2025
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 12:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

