Vijay Antony: மிருகங்களின் குறிக்கோளுக்கு இடம் கொடுக்காதீங்க! - பஹல்கம் விஷயத்தில் விஜய் ஆண்டனி வேண்டுகோள்.!
கொடிய மிருகங்களின் நோக்கம் நமது ஒற்றுமையை சீர்குலைப்பது. அந்த விஷயத்துக்கு இடமளிக்காமல் நாம் இந்தியராக ஒன்று திரள வேண்டும் என விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
ஏப்ரல் 29, சென்னை (Cinema News): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்கம் பகுதியில், கடந்த 22 ஏப்ரல் 2025 அன்று பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள், உள்ளூர் மக்கள் என 26 பேர் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். விசாரணையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பேற்றதாக அறிவித்தது. சிறப்பு அந்தஸ்து காஷ்மீரில் நீக்கப்பட்டு அங்குள்ள மக்கள் இயல்பு வாழ்க்கையை வாழ எதுவாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், உமர் அப்துல்லாவின் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியும் அங்கு நடந்து வருகிறது. இதனிடையே, காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் அம்மாநில மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. இதனால் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் உரிமையை அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா சில காலங்களுக்கு தள்ளிபோடுவதாக அறிவித்துள்ளார். Hashim Musa: பாகிஸ்தான் ராணுவத்தில் பணி.. பஹல்கம் தாக்குதல் பயங்கரவாதி குறித்து அதிர்ச்சி தகவல்.!
நடிகர் விஜய் ஆண்டனி கண்டனம்:
பயங்கரவாதிகளை தேடி வேட்டையாட இந்திய இராணுவமும் அதிரடி தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு உலகவில் கண்டனமும் குவிந்து, இந்தியாவுக்கு ஆதரவு குரல் அதிகரித்துள்ளது. பொதுமக்களுக்கு எதிராக பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்த இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, மருத்துவம் உட்பட பிற விஷயங்களுக்காக இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் அனுமதியை நிராகரித்து உத்தரவிட்டது. அவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுக்கு அழைத்து செல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். கண்டனத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனியின் எக்ஸ் பதிவு:
— vijayantony (@vijayantony) April 28, 2025
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

