ஏப்ரல் 12, சென்னை (Kitchen Tips): ஆவாரம்பூ கிராமத்து பகுதிகளில் அதிகமாக காணப்படும். இதன் பூ என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை ஆகும். ஆவாரம்பூ இதய நோய், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் தன்மை கொண்டதாகும். அந்த வகையில், ஆவாரம்பூ கூட்டு எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ - 1 கிண்ணம்
பச்சை மிளகாய் - 2
கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு. Teenager Was Stabbed To Death: மகளை காதலித்த வாலிபர் கத்தியால் குத்திக்கொலை; இளம்பெண்ணின் தந்தை வெறிச்செயல்..! மதுரையில் பரபரப்பு..!
தாளிக்க வேண்டியவை:
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
உளுத்தம் பருப்பு, கடுகு - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை:
முதலில் ஆவாரம் பூவை ஆய்ந்து, அதனை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கடலைப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்க வேண்டும். அதன் பிறகு, வேகவைத்த கடலைப்பருப்புடன் ஆவாரம் பூ, பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும். நன்கு வெந்த பிறகு, தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இதோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். இதோ சுவையான ஆவாரம் பூ கூட்டு ரெடி.