Tripura Elections 2023: திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சியே - வாக்கை பதிவு செய்து முதல்வர் மாணிக் சாகா பரபரப்பு பேட்டி.!

60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் இன்று நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்த மாநில முதல்வர், மீண்டும் திரிபுராவில் பாஜக ஆட்சி அமையும் என கூறினார்.

Town Bordowali Candidate, BJP CM Manik Saha (Photo Credit: ANI)

பிப்ரவரி 16: திரிபுரா சட்டப்பேரவைக்கு (Tripura Assembly Poll 2023) பிப்ரவரி 16ம் தேதியான இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்குள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒரேகட்டமாக நடைபெறும் தேர்தலை தேர்தல் ஆணையம் சிறப்பாக கவனித்துக்கொண்டு இருக்கிறது. இன்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அம்மாநிலத்தில் மீண்டும் தனது ஆட்சியை நிறுவ பாஜக (BJP) முயற்சித்து வரும் நிலையில், தனது வகை போரொடோவாளி தொகுதியில் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாகா (Manik Saha) பதிவு செய்தார். அதனைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், "அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் எப்படி வாக்களிக்க வருகிறார்கள் என்பதை நீங்கள் அனைவரும் பார்க்கலாம். இங்கு பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார். திரிபுரா தேர்தலை பொறுத்தமட்டில் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவு பெறுகிறது. Madurai Police Seized 951 KG Cannabis: லாரியில் கடத்தி வரப்பட்ட 951 கிலோ கஞ்சா மதுரையில் பறிமுதல்.. 2 பேர் கைது, 2 பேர் தப்பியோட்டம்.. காவல்துறை தீவிர விசாரணை.!

மாநில தேர்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி, மொத்தம் 28.14 இலட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களில் 14.15 இலட்சம் வாக்காளர்கள் ஆண்கள், 13.99 இலட்சம் வாக்காளர்கள் பெண்கள், 62 வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவார்கள்.

திரிபுரா மாநிலத்தில் 3,337 வாக்குப்பதிவு மையங்கள் இருக்கின்றன. தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை இராணுவம், காவல் துறையினர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள 60 தொகுதியில் 259 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். திரிபுராவில் பாஜக, காங்கிரஸ் மற்றும் சி.பி.ஐ.எம் (Congress & CPIM)., பீப்புள்ஸ் பிராண்ட் ஆப் திரிபுரா, திரிணமூல் காங்கிரஸ் (Trinamool Congress) கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 16, 2023 10:40 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).