UPSC Results: யு.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ வெளியீடு; இஷிதா, கரிமா, உமா ஹாரதி முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை.!

யு..பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

UPSC Exam Results (File Pic)

மே 23, புதுடெல்லி (New Delhi): ஐ.பி.எஸ். ஐ.ஏ.எஸ். ஐ.எப்.எஸ் உட்பட பல மத்திய அரசு பணிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இறுதியாக கடந்த 2022 செப்டம்பரில் யு.பி.எஸ்.சி எழுத்து தேர்வுகள் நடைபெற்றன. 2023ல் ஜனவரி முதல் மே மாதம் வரையில் நேரடி கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில், தற்போது யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 5 Babies in Delivery: ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்; தாய்-சேய் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிவிப்பு.!

UPSC Exam Result 2023 (Photo Credit: Pxfuel and PTI)

அதன்படி, இஷிதா கிஷோர், கரிமா லோஹியா, உமா ஹாரதி (Ishita Kishore, Garima Lohia & Uma Harathi) என் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை https://www.upsc.gov.in/exams-related-info/final-result என்ற இணையப்பக்கத்திற்கு சென்று அலல்து நேரடியாக https://www.upsc.gov.in/sites/default/files/FR-CSM-22-engl-230523.pdf என்ற பிடிஎப் பக்கத்திற்கு சென்று பார்க்கலாம்.