Chettinadu Kaalan Thokku (Photo Credit: YouTube)

ஏப்ரல் 12, திட்டக்குடி (Chennai News): நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் சைவ-அசைவ பிரியர்களாலும் விரும்பப்படும் உணவுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது காளான். உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் காளானில் பிரியாணி (Mushroom Recipes Tamil), மசாலா, கிரேவி, 65, மஞ்சூரியன் என பல விதமான ரெசிபியை செய்து சாப்பிடலாம். இன்று சுவையான செட்டிநாடு ஸ்டைலில் காளான் தொக்கு (Chettinadu Mushroom Thokku) செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள். Summer Health Tips: நீச்சல் குளத்தில் அதிக நேரம் இருந்தால் கண்கள் தொற்று; மருத்துவர்கள் எச்சரிக்கை.! 

செட்டிநாடு காளான் தொக்கு செய்யத் தேவையான பொருட்கள் (Chettinadu Kaalan Thokku Seivathu Eppadi):

காளான் - 200 கிராம்,

பெரிய வெங்காயம் - 2,

தக்காளி - 2,

உப்பு - தேவையான அளவு,

கறிவேப்பில்லை & கொத்தமல்லி தழைகள் - சிறிதளவு,

வறுத்து அரைப்பதற்கு:

தனியா - 4 கரண்டி,

மிளகு - 2 கரண்டி,

சீரகம் - 1 கரண்டி,

பெருஞ்சீரகம் - 1 கரண்டி,

காய்ந்த மிளகாய் - 2,

பூண்டு - 2 பற்கள்,

தாளிக்க:

எண்ணெய் - 4 கரண்டி,

பட்டை - 1,

லவங்கம் - 1,

கிராம்பு - 1.

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட காளானை நீளவாக்கில் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வறுக்க தேவையான பொருட்களை வானலியில் இட்டு வறுத்து தனியே எடுத்து அரைத்துக்கொள்ளவும்.

பின் வானலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். காளான் சேர்த்து தண்ணீர் விடாமல் வேகவைக்க வேண்டும். இறுதியாக வறுத்து அரைத்த பொடி மற்றும் கறிவேப்பில்லை, கொத்தமல்லி தழைகள் சேர்த்து தூவி இறக்கினால் சுவையான காளான் தொக்கு தயார். இதனை சூடான சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுக்கு சேர்த்து சாப்பிடலாம்.