UPI Down (Photo Credit: @beatsinbrief X / Facebook)

ஏப்ரல் 12, புதுடெல்லி (Technology News Tamil): இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளை மேற்கொள்ள யுபிஐ பயன்படுகிறது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் உட்பட பல செயலிகள் உதவியுடன் ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களுக்கான பணத்தை அனுப்பி பயன்பெறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே திரும்பிய பக்கமெல்லாம் யுபிஐ பரிவர்த்தனை செய்யப்படுகிறது. அவ்வப்போது, யுபிஐ பரிவர்த்தனைகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கும். இதனால் பயனர்கள் பணத்தை அனுப்ப இயலாமல் திணறுவார்கள். Tata Consultancy Services: 42 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்த திட்டம்.. பிரபல ஐடி நிறுவனம் அதிரடி முடிவு..!

பணம் அனுப்ப இயலாமல் பயனர்கள் அவதி:

குறிப்பாக வார இறுதியான சனி மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், சில நேரம் முடங்கும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட தேசிய அளவில் யுபிஐ பரிவர்த்தனை முடங்கியது. இந்நிலையில், வார இறுதியின் முதல் நாளான இன்று சனிக்கிழமை யுபிஐ பரிவர்த்தனைகள் முடங்கி இருக்கின்றன. தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும்பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

யுபிஐ முறையில் பணம் அனுப்பும்போது, பணம் வரவில்லை என கடை உரிமையாளர் பார்ப்பதாக பயனர் விமர்சனம்: