ஏப்ரல் 13, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில், வேலையை முடித்துவிட்டு வழக்கத்தை விட முன்னதாகவே வந்த கணவர் தனது மனைவி வேறொரு நபருடன் தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரம் மற்றும் வாக்குவாதத்தில், மனைவியின் ஆண் நண்பரது ஆணுறுப்பை அறுத்து துடிக்கவிட்ட கொடுமை நடந்துள்ளது. இறுதியில் பாதிக்கப்பட்டவர் அக்கம்-பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். Fireworks Factory Explodes: பட்டாசு தயாரிப்பு பணியில் பயங்கர வெடிவிபத்து.. 5 பேர் பலி.!
கள்ளக்காதல் பழக்கம்:
கான்பூரில் உள்ள பாபுபுர்வா பகுதியில் கடந்த ஆண்டு திருமணம் செய்த ஜோடி வசித்து வருகிறது. இவர்களில் கணவர் அவ்வப்போது வெளியூருக்கு வேலைக்கு சென்று வருவார் என கூறப்படுகிறது. இதனால் பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபருடன் அறிமுகம் ஏற்பட்டு இருக்கிறது. இருவரும் கள்ளக்காதல் வயப்பட்ட நிலையில், சம்பவத்தன்று இருவரும் உல்லாசமாக இருந்தனர். அப்போது, பெண்ணின் கணவர் எதிர்பாராத விதமாக வேலைகளை முடித்துக்கொண்டு விரைந்து வந்துவிட்டார்.
நேரில் பார்த்த கணவர்:
கள்ளக்காதல் ஜோடி தனிமையில் உல்லாசத்தில் இருந்தபோது, கணவர் வீட்டுக்கு வந்ததில் இருவரின் உறவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின் ஆவேசத்தில் இருவரிடமும் வாக்குவாதம் செய்த நிலையில், மனைவியின் கள்ளகாதலனின் ஆணுறுப்பை அறுத்து தப்பிச் சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட நபர் அங்குள்ள லாலா லஜ்பத் ராய் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து இருதரப்பும் புகார் அளிக்கவில்லை. இந்த சம்பவத்தை அரங்கேற்றிய பெண்ணின் கணவரும் தலைமறைவாகியுள்ளார். மேற்படி புகாரை பெற்றுக்கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.