DC Vs MI | IPL 2025 (Photo Credit: @IPL X)

ஏப்ரல் 13, டெல்லி (Cricket News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று நடைபெறும் 29 வது போட்டியில் Delhi கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லியில் இன்று மாலை 07:30 மணியளவில் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. Virat Kohli: விராட் கோலி & பில் சால்ட் வெறியாட்டம்.. அசத்தல் வெற்றி அடைந்த பெங்களூர் அணி..! 

மும்பை அணி 205 ரன்கள் குவிப்பு:

இந்நிலையில், மும்பை அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். ரியான் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். சூரியகுமார் 28 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். திலக் வர்மா 33 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்கர்ஸ் விளாசி 59 ரன்கள் குவித்தார். நமன் திரு 17 பந்துகளில் 38 ரன்களை குவித்தார். 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்துள்ளது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது. டெல்லி அணியின் சார்பில் பந்துவீசிய விபராஜ் நிகம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெல்லி அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டரிங் செயல்திறன் இன்று அசத்தலாக இருந்தாலும், மும்பை அணி சூழலில் விழுந்து சிக்கினாலும், அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 205 ரன்கள் எடுத்துள்ளது.

குல்தீப் யாதவின் அசத்தல் பந்துவீச்சு:

டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு:

அக்சர் படேலின் அசத்தல் பந்துவீச்சு: