ஏப்ரல் 13, ஜெய்ப்பூர் (Cricket News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று நடைபெறும் 29 வது போட்டியில் Delhi கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லியில் இன்று மாலை 07:30 மணியளவில் தொடங்கி நடைபெறும் போட்டியில், டிசி Vs எம்ஐ அணிகள் நேரடியாக மோதிக்கொள்ளும் ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். RCB Vs RR: வெற்றிபடிக்கட்டில் ஏறுமா பெங்களூர்? இன்று ராஜஸ்தான் அணியுடன் மோதல்.!
கேபிட்டல்ஸ் எதிர் இந்தியன்ஸ் (Capitals Vs Indians IPL 2025):
இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் 4 போட்டிகளை எதிர்கொண்டு அனைத்திலும் வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி தனி பலத்துடன் களமிறங்குகிறது. இந்த தொடர் வெற்றிக்கு மும்பை முற்றுப்புள்ளி வைக்குமா? தோல்வியில் இருந்து மும்பை மீண்டு வந்து இன்று வெற்றிவாகை சூடுமா? அல்லது சென்னையை போல கொட்டைகள் விட்டு புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தை தக்கவைக்குமா? என்பது படிப்படியாக தெரிந்துவிடும். இதுவரை 5 போட்டியில் களமிறங்கியுள்ள மும்பை 4 போட்டியை கோட்டை விட்டுள்ளது.