Accuse Darren Michael Harris (Photo Credit: @DavidSocial1976 X)

ஏப்ரல் 12, லண்டன் (World News): இங்கிலாந்து நாட்டில் உள்ள நியூ யார்க்ஷிர்ன் பகுதியை சேர்ந்தவர் கேரி லூயிஸ் (வயது 65). இவர் முன்னாள் காவலர் ஆவார், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லூயிஸுக்கு, 58 வயதுடைய செவிலியரான டேரன் ஹாரிஸ் என்பவருடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த டோரன் லூயிஸை மிரட்டுவதாக பிரச்சனை செய்து இருக்கிறார். பின் ஒருகட்டத்தில் லூயிஸின் முதுகில் ஊசியை செலுத்தி இருக்கிறார். UPI Down: பயனர்களுக்கு அதிர்ச்சி.. இந்தியாவில் முடங்கியது யுபிஐ, ஜிபே, போன்பே.. மக்கள் அவதி.! 

முதுகில் விஷ ஊசி:

தண்டுவடத்தை பாதிக்கும் வகையிலான றொகுரோனியம் மருந்தை செலுத்தியவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த விஷயத்தில் கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட கேரி லூயிஸ் மூர்ச்சையானார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு, பல நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தெரிந்தார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழக்கின் வாதங்கள் அனைத்தும் நிறைவுபெற்று தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய செவிலியர் டேரன் ஹாரிஸ்-க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.