Victim Sreedar | Visuals from Hospital (Photo Credit: YouTube)

ஏப்ரல் 12, துறையூர் (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர், ஆலத்துடையான்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அசோக் குமார். இவரின் தாய் ராஜாமணி (வயது 80). மூதாட்டி ராஜாமணி வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். நேற்று மாலை நேரத்தில் மூதாட்டியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அவரின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும், மலர்கள் தூவி பட்டாசு வெடித்தபடி உடல் இறுதிச்சடங்குக்கு எடுத்து செல்லப்பட்டது. இறுதிச்சடங்கின்போது வானில் சென்று வெடிக்கும் வகையிலான நாட்டு பட்டாசு பயன்படுத்தப்பட்டது. உரிய பாதுகாப்பு இன்றி வெடித்த பட்டாசு நாலாபுறமும் சிதறியது. இதனிடையே, வெடித்து விழுந்த பட்டாசின் மீது, பட்டாசு பொட்டலத்தை பயன்படுத்தியவர் தவறுதலாக வைத்துள்ளார். இதனால் வெடித்து விழுந்த பட்டாசின் கங்கு தீப்பிடித்து பிற பட்டாசுகளும் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (வயது 21), கேசவன் (வயது 68), சரவணன் (வயது 50), கார்த்திக் (வயது 25), தீனா (வயது 38) உட்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர். Salem News: +2 மாணவிக்கு ஆண் குழந்தை.. 60 வயது கிழட்டு காமுகனின் அதிர்ச்சி செயல்..! 

ஊர்வலத்தில் நடந்த விபரீதம்:

இதனையடுத்து, இறுதி ஊர்வலத்துக்கு சென்றவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு துறையூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த உப்பிலிபுரம் காவல்துறையினர் மேற்படி விசாரணையை தொடங்கினர். இதனிடையே, கடுமையான தீக்காயம் அடைந்த இளைஞர் ஸ்ரீதர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு சிறு அலட்சியம் இளைஞரின் உயிரை பறித்து, பிற 16 பேரின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தீப்பொறியில் சிக்கி அதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் (21), சேவகன் (68), சரவணன் (50), கார்த்திக் (25), தீனா (38) உள்ளிட்ட 17 பேர் பலத்த காயமடைந்தனர். அனைவரும் துறையூர் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தர் (21) உயிரிழந்தார். இதுகுறித்து உப்பிலிபுரம் போலீசார் வழக்கு பதிந்து வெடி உரிய லைசென்ஸ் உள்ள கடையில் இருந்து வாங்கியதா? அல்லது நாட்டு வெடி வெடிக்கப்பட்டதா? என விசாரித்து வருகின்றனர்.