India Elections 2024 Phase 7: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள லோக் சபா தேர்தல் 2024: உ.பி முதல்வர் யோகி, பாஜக தேசிய தலைவர் நட்டா வாக்குப்பதிவு.!
இன்று நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவை தொடர்ந்து, ஜூன் 04ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.
ஜூன் 01, புதுடெல்லி (New Delhi): 18 வது இந்திய மக்களவைத் தேர்தல் 2024 (General Elections India 2024) ஏழுகட்டமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது. ஜூன் 01ம் தேதியான இன்று ஏழாவது கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. அதேபோல, ஒடிஷா மாநிலத்தில் உள்ள 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் இன்னும் 3 நாட்களில் (ஜூன் 04) அன்று ஒரேகட்டமாக (2024 Elections Results) வெளியாகிறது. மத்தியில் ஆட்சிக்கட்டிலில் அமரபோகும் அணியை எதிர்பார்த்து இந்திய மக்கள் மட்டுமல்லாது உலகளாவிய தலைவர்களும் காத்திருக்கின்றனர்.
ஏழாவது கட்ட இந்தியத் தேர்தல்கள் 2024: பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகள், ஹிமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்கண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், பஞ்சாபில் 13 தொகுதிகள், உத்திரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 9 தொகுதிகள், சண்டிகரில் 1 தொகுதி என மொத்தம் 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. Edinson Cavani Retirement: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு; உருகுவே கால்பந்து வீரர் அறிவிப்பு..! ரசிகர்கள் சோகம்..!
இந்த தேர்தலில் பாஜக தேசியத்தலைவர் ஜெபி நட்டா (JP Nadda), தனது மனைவி மல்லிகா நட்டாவுடன் ஹிமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி (Uttar Pradesh Chief Minister Yogi Adityanath) ஆதித்யநாத், கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கோரக்நாத் வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்குகளை பதிவு செய்தார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் வாக்களித்தார் ஜெபி நட்டா:
கோரக்நாத்தில் வாக்களித்தார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்: