Ghaziabad Man Split Roti: சூடான சுவையான எச்சில் சப்பாத்தி சுடச்சுட தயார்.. முதியவர் அதிர்ச்சி செயல்.. வைரலாகும் வீடியோ.!

விசாரணையில் இறங்கிய காவல் துறையினர் குற்றம் இழைத்தவரை கைது செய்தனர்.

Man Arrested Split Roti (Photo Credit: ANI)

ஜனவரி 20, காசியாபாத்: உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் (Ghaziabad, Uttarpradesh), சாஹிபாபாத் பகுதியில் சாலையோர உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் பணியாற்றி வரும் வயோதிகர், சப்பாத்தி தயாரித்து கொண்டு இருக்கிறார்.

அப்போது, அவர் எச்சிலை உமிழ்ந்து (Man Split and Prepare Roti) சப்பாத்தியை அடுப்பில் தயார் செய்ய வைக்கிறார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகவே (Video Leaked Social Media), வீடியோ காவல் துறையினரின் கணவத்திற்கு சென்றுள்ளது. Vels Highway Hotel Banned: விக்கிரவாண்டி வேல்ஸ் உணவகத்தில் பேருந்துகள் நின்று செல்லத்தடை – போக்குவரத்துத்துறை அமைச்சர் அதிரடி.!

இதனையடுத்து, விசாரணையில் இறங்கிய டிலா மோர் காவல் துறையினர், கடந்த 18ம் தேதி வழக்குப்பதிவு செய்து குற்றச்செயலில் ஈடுபட்ட தஸீருத்தினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவரின் மீது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 269 (உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோயின் தொற்றை பரப்பும் அலட்சிய செயல்) மற்றும் 270 (உயிருக்கு ஆபத்தான தொற்றை பரப்பும் நடவடிக்கை) உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Viral Video 

— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 20, 2023

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 20, 2023 08:45 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).