IPL Auction 2025 Live

Doc1Max Syrup: மரியோன் பயோடெக் நிறுவனம் தயாரித்த மருந்தில் நச்சுப்பொருள்.. உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் சாவு.. பெற்றோர்கள் கவலை.!

இந்திய மருந்து நிறுவனமான Marion Biotech தயாரித்த இருமல் மருந்து குடித்து உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 சிறார்கள் உயிரிழந்துவிட்டதாக பகீர் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Syrup (Credit: Pexels)

டிசம்பர் 29, உஸ்பெகிஸ்தான்: இந்திய மருந்து நிறுவனமான Marion Biotech தயாரித்த இருமல் மருந்து குடித்து உஸ்பெகிஸ்தான் (Uzbekistan Claims 18 Children Died Doc1Max Cough Syrup) நாட்டில் 18 சிறார்கள் உயிரிழந்துவிட்டதாக பகீர் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில், Marion Biotech என்ற நிறுவனத்தால் தயார் செய்யப்பட்டு வரும் காய்ச்சல், சளி மருந்துகள் ஐரோப்பா, ஜியார்ஜியா, நைஜீரியா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிரிகிஸ்தான், அஜர்பைஜான், கென்யா, எத்தியோப்பியா, ஸ்ரீலங்கா, மியான்மர், லாவோஸ், வியட்னாம், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்ற காலங்களில் மருத்துவரின் அறிவுரைப்படி பெற்றோர்களால் Doc1Max சிரப் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், உஸ்பெகிஸ்தான் நாட்டிலும் Marion Biotech நிறுவனத்தின் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. அவை மாத்திரையாகவும், சிரப்பாகவும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. Couple Suicide: குழந்தையில்லாத ஏக்கம்.. 13 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக வாழ்ந்து தம்பதி விபரீத முடிவு.. துர்நாற்றத்தால் அம்பலமான உண்மை.! 

Marion Biotech's Doc1Max Syrup

இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாட்டிற்கு அவை அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில், உஸ்பெகிஸ்தான் நாட்டில் Doc1Max சிரப் குடித்த 18 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது. இதனால் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

அப்போது, மருந்தில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நச்சு பொருளான எத்திலின் கிலைக்கால் (Ethylene Glycol) என்பது இருந்துள்ளது. இதனாலேயே குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதியாகவே, அவர்கள் ஊடகங்கள் வாயிலாக தகவலை உலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். மேலும், ஐ.நா சுகாதார அமைப்புக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு அரசு சார்பில் மருந்தை விற்பனைக்கு அனுமதி செய்ய மருத்துவ பிரதிநிதிகள் 7 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஐ.நா சுகாதார அமைப்பும் தனது குழுவை உஸ்பெகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த சம்பவம் குழந்தைகளின் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 29, 2022 05:50 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).