நவம்பர் 17, சென்னை (Health Tips Tamil): தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனுடன் சேர்த்து சமீப நாட்களாக குளிரும் அதிகரித்து வருகிறது. இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாகி இருக்கும் நிலையில், இந்தியாவின் பெரும்பாலான வடமாநிலங்களில் கடுமையான குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்களும் மக்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதில் இருந்து நம்மை பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமாகிறது. இனி வரும் நாட்களில் குளிர், மழை போன்றவை அதிகரிக்கும் என்பதால் மக்கள் கவனமுடன் இருத்தல் அவசியம். உடல்நல குறைபாடு ஏற்படும் என்பதால் நீரை சுடவைத்து காய்ச்சி குடிப்பது நல்லது. காய்ச்சல், சளி போன்ற லேசான அறிகுறி இருந்தாலும், மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த செய்தித்தொகுப்பில் குளிர்கால சரும பாதிப்பிலிருந்து தப்பிப்பது எப்படி? என காணலாம். Cooking Tips: கறிவேப்பில்லை - சின்ன வெங்காயம் குழம்பு செய்வது எப்படி? ஆரோக்கியமான ரெசிபி.!
சரும நோய் பிரச்சனைகளை தடுப்பது எப்படி?
குளிர்காலங்களில் சருமத்தில் வெடிப்பு ஏற்பட்டு அரிப்பு உண்டாகும். இது இயல்பானதாக கருதப்படுகிறது. சரும வெடிப்பு காரணமாக ஆங்காங்கே வெள்ளை நிற துகள்கள் காணப்படும். இதனை தடுப்பதற்கு தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம். குறிப்பாக வேலைக்கு செல்வோர் வெளியில் செல்வதற்கு முன் தேங்காய் எண்ணெய் உபயோகித்து பின் செல்லலாம். இதன் மூலம் சரும பாதியை தடுக்க இயலும். வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கும். அதுபோல தேங்காய் எண்ணெயில் இயற்கையாகவே அலர்ஜி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மையானது இருக்கிறது. தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது விரைந்து சரிசெய்ய உதவும். குளிர்காலங்களில் மக்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம் என எண்ணுவர். ஆனால் வெயில் காலங்களை விட குளிர்காலத்தில் தான் தண்ணீர் அதிகம் தேவைப்படும். உடல் வறண்ட நிலைக்கு செல்லும். இதனால் அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம்.
இயற்கையாக வீட்டிலேயே சரி செய்யலாம்:
உடலில் இயற்கையாக ஏற்படும் நீர் பற்றாக்குறையை கட்டுப்படுத்த அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். அதுபோல குளிப்பதும் நல்லது. நாம் குளித்த பின் நறுமணமில்லாத மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம். இதன் மூலம் உடலில் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். ஹைளூரோனிக் அமிலம், செராமைட், கிளிசரின் போன்ற பொருட்களும் பயன்படுத்தலாம். சரும செல்கள் பாதிப்படைவதை தடுக்க செராமைட் உள்ள கிரீம்களை உபயோகிக்கலாம். குளிர் காலத்தில் வீட்டுக்குள் ஈரப்பத தன்மையை அதிகரிக்க, ஈரப்பதமூட்டிகளை (Humidifier) பயன்படுத்தலாம். வீட்டின் அறைகளில் ஈரப்பதமூட்டி இருப்பது, வீட்டின் உட்புற வெப்பத்தை மட்டுமல்லாது, சருமத்தையும் இயற்கையாக பராமரிக்க உதவும். தேங்காய் எண்ணெய் போல கற்றாழையில் சருமத்தை இயற்கையாக சரிசெய்யும் பண்புகள் உள்ளன. கற்றாழை ஜெல்லை உபயோகிப்பதன் மூலம் வீக்கம், அரிப்பு போன்றவற்றை சரி செய்யலாம். கற்றாழையில் நிறைந்து காணப்படும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், தோல் சார்ந்த அலர்ஜி பிரச்சனையை சரி செய்யும். அரிப்பில் இருந்து நிவாரணம் தரும்.