நவம்பர் 14, சென்னை (Health Tips): இந்தியாவில் கர்ப்பிணி பெண்கள் மரணம் என்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் தமிழ்நாடு இந்த விஷயத்தில் 3வது இடத்தில் இருக்கிறது. அதாவது, 1,00,000 கர்ப்பிணி பெண்களில் 35 பெண்கள் இறக்கின்றனர். கேரளா, தெலுங்கானாவைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. சிங்கப்பூரை பொறுத்தவரையில் ஆண்டுக்கு 10 பேர் மட்டுமே இதுபோன்ற விஷயங்களில் இருக்கின்றனர். பிரசவிக்கும் தாய்மார்களுக்கு பல்வேறு விஷயங்கள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக கடந்த 2013ம் ஆண்டில் இருந்து மருத்துவ கட்டமைப்புகள், கர்ப்பிணி பெண்கள், மருத்துவர்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இதுதொடர்பான கலந்தாய்வு மற்றும் பயிற்சி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 38 மாவட்டத்தில் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு பிரசவத்தின் போது ஏற்படும் மரணங்களை குறைக்க பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. Jeera Water: தினமும் 1 கப் சீரக தண்ணீர்.. உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள்.!
மருத்துவ பணியாளர்களுக்கு நிலைமையை கையாளும் பயிற்சி:
பிரசவத்தின்போது மருத்துவ ரீதியாக ஏற்படும் சிக்கல், இரத்தம் உதிரப்போக்கு, வலிப்பு, இரத்த அழுத்தம் போன்றவற்றை நேரத்துடன் செயல்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிப்பதால் இறப்புகளை குறைக்கலாம். இதனை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சிகள் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன. இதனால் மகப்பேறு இறப்பு விகிதம் என்பது பெருவாரியாக கட்டுப்படும். மருத்துவமனைகளிலும் மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு மருந்துகள், மருத்துவ பொருட்கள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவ பணியாளர்கள் ஒருங்கிணைந்து வேலை பார்க்கவும் பயிற்சியில் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நோயாளியின் அவசர காலத்தை புரிந்துகொண்டு, அனைவரும் ஒரே நேரத்தில் அந்த உயிரை காப்பாற்ற எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு மற்றும் செயல்முறை அறிவுறுத்தலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் கர்ப்பிணி பெண்களின் மகப்பேறு மரணங்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.