WaterProof Smartphone: வாட்டர்ப்ரூப் ஸ்மார்ட்போன்கள் டாப் 10 எவை?.. பட்ஜெட் விலையிலும் வாட்டர்புரூப் போன்கள்...!
தண்ணீருக்குள் விழுந்தாலும் ஒன்றும் ஆகாத ஸ்மார்ட்போன்கள் குறித்து காணலாம்.
டிசம்பர், 10: செல்போன்கள் (Mobile & SmartPhones) தினமும் புதுப்புது அப்டேட்களுடன் விற்பனைக்கு வந்தாலும், அதன் பயன்பாடு மற்றும் விலையை பொறுத்து நம்மிடையே அது வாங்கப்படுகிறது. சிலர் தங்களின் பயணம் மற்றும் பணிக்கு ஏற்றாற்போல இருக்கும் ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர்.
ஸ்மார்ட்போன் என்னதான் பல சிறப்பு அம்சங்களை கொண்டிருந்தாலும், கீழே தவறி விழுந்தாலும் எளிதில் உடையதா? தண்ணீருக்குள் (Water Proof) விழுந்தாலும் ஒன்றும் ஆகாதா? என்று கேள்வியை கேட்க தொடங்கிவிட்டோம். அந்த வகையில், இன்று தண்ணீருக்குள் விழுந்தாலும் ஒன்றும் ஆகாத ஸ்மார்ட்போன்கள் குறித்து காணலாம்.
ஆப்பிள் ஐ-போன் 13 ப்ரோ (Apple iPhone 13 Pro):
ஸ்மார்ட்போன்களில் தனி ரகமாக இன்று வரை இருக்கும் ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மாடல் போன்கள் தண்ணீரில் விழுந்தாலும், 6 மீட்டர் ஆழத்திற்குள் 30 நொடிக்குள் எடுத்துவிட்டால் ஒன்றும் ஆகாது. அதிகளவு தூசியினாலும் பாதிக்கப்படாது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சமாக 1 TB வரை ஸ்டோரேஜ் வைத்துக்கொள்ளலாம். 12MP பிரைமரி கேமிராக்கள் 3 , 6.1 இன்ச் (1170 x 2532 பிக்சல்) டிஸ்பிலே, 3095 mAh பேட்டரி திறன் ஆகிய சிறப்பம்சம் ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோவில் இருக்கிறது. இது சந்தையில் ரூ.1,19,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது. Pepper Benefits: கருப்பு மிளகை சூடான நீருடன் குடித்தால் உடலுக்கு இவ்வுளவு நன்மைகளா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
நோக்கியா எக்ஸ்.ஆர்.20 (Nokia XR20):
128 GB ஸ்டோரேஜுடன் 6 GB ரேம், 48 MP + 13 MP கேமரா, 8 MP செல்பி கேமரா, 6.48 இன்ச் (1080 x 2400) டிஸ்பிளெ, 4630 mAh பேட்டரி திறன் கொண்ட நோக்கியா XR20 ஸ்மார்ட்போன் சிறந்த வாட்டர் புரூப் போன் ஆகும். இது சந்தையில் ரூ.46,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சேம்சங் கேலக்சி எஸ்21 அல்ட்ரா 5G (Samsung Galaxy S21 Ultra 5G):
256GB, 512GB ஸ்டோரேஜ் 12GB / 16GB ரேம், 108MP குவாட் கேமரா, 40MP செல்பி கேமரா, 6.8 இன்ச் (1440 x 3200) பிக்சல் டிஸ்பிளெ, Li-Ion 5000 mAh பேட்டரி திறன் கொண்ட சேம்சங் கேலக்சி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்போன் 5G ஸ்மார்ட்போன் ஆகும். சாம்சங் போன்களில் சிறந்த டிஸ்பிளே தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனாகவும், இறுக்கத்தில் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் கொண்டுள்ளது. இது சந்தையில் ரூ.1,28,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி எம்ஐ 11 அல்ட்ரா (Xiaomi Mi 11 Ultra):
256 GB ஸ்டோரேஜுடன் 12 GB ரேம், 50MP + 48MP + 48MP பிரைமரி கேமரா, 20MP செல்பி கேமரா, 6.81 இன்ச் (1440 x 3200) பிக்சல் டிஸ்பிளே, Li-Ion 5000 mAh பேட்டரி, 5G நெட்ஒர்க், 1.5 மீட்டர் ஆழத்தில் உள்ள நீரில் 30 நிமிடம் வரை நீர் பாதுகாப்பு தன்மை சியோமி நிறுவனத்தின் எம்.ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.69,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
போகோ எப்3 ஜிடி (POCO F3 GT):
128GB, 256GB ஸ்டோரேஜ், 6GB, 8GB ரேம், 64 MP + 8 MP + 2 MP பிரைமரி கேமரா, 16 MP செல்பி கேமரா, 6.67 இன்ச் (1080 x 2400) பிக்சல் டிஸ்பிளே, Li-ion 5065 mAh பேட்டரி, 5G தொழில்நுட்பத்துடன் பட்ஜெட் விலையில் உள்ள ஒரே நீர்புகாத்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் போகோ எப்3 ஜிடி ஆகும். இது சந்தையில் ரூ.26,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுதவிர்த்து சேம்சங் கலக்சி ஏ52 எஸ் 5G (விலை ரூ.35,999), சேம்சங் கேலக்சி எஸ்21 பிளஸ் 5G (விலை 72,300), ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ (விலை ரூ.1,19,900), எல்.ஜி வெல்வெட் 4 (விலை ரூ.36,990), சாம்சங் கேலக்சி நோட்20 அல்ட்ரா 5G (விலை ரூ.1,04,999) ஆகிய ஸ்மார்ட்போன்கள் நீர்புகாத்திறன் கொண்ட டாப் 10 போன்களில் உள்ளவையாகும்.