Cauliflower Benefits: காலிபிளவர் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் தகவல் இதோ.!
சுவையாக மாலை நேர சிப்ஸ் போல பொறித்து சாப்பிடவும், சிக்கன் போல கிரேவி வகையில் தயாரித்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
டிசம்பர் 15, சென்னை (Health Tips): அனைத்து மாதங்களிலும் காய்கறிக்கடைகளில் விற்பனை செய்யப்படும் காலிப்ளவர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் இ, வைட்டமின் கே ஆகிய ஊட்டச்சத்துக்களை அதிகம் கொண்டவை. நாளொன்றுக்கு 90 கிராம் அளவிலான காலிப்ளவர் எடுத்துக்கொள்வது, வைட்டமின் சி சத்துக்களை கிடைக்க வழிவகை செய்யும்.
உன்னதமான மருந்து: இதில் இருக்கும் ஊட்டசத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு வழிவகை செய்யும். புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாக்கும். காலிப்ளவரில் உள்ள நார்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரியாக்கும். குழந்தையின் மூளை மற்றும் முதுகுத்தண்டு வளர்ச்சியை ஏற்படுத்தும். Railway Crossing Stop Sign: தமிழ்நாட்டிலேயே தமிழ் இல்லையா?.. இரயில்வே கேட் மீது இடம்பெற்ற வாசகத்தால் சர்ச்சை.!
இதயத்திற்கு நன்மை: மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை மூட்டு வழியை கட்டுப்படுத்தும். உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியையும் அதிகம் வழங்கும். இதயத்திற்கு பலம் சேர்க்கும். செரிமான பிரச்சனைகளை சரி செய்யும். கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் சார்ந்த வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
சிறுநீர் பெருக்கி: உடலில் உள்ள எலும்புகள் பலவீனம் அடையாளம் இருக்கவும் காலிப்ளவர் உதவி செய்கிறது. இதனை அவ்வப்போது உணவில் சேர்த்துவர இரத்த அழுத்தமும் குறையும். சிறுநீர் பெருக்கியாக காலிப்ளவர் விளங்குகிறது.