டிசம்பர் 15, விழுப்புரம் (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டிமேடு பகுதியில் இரயில் சந்திப்பு நிறுத்தம். இங்கு பணியாற்றி வரும் பணியாளர், இரயில் வந்து செல்லும் நேரங்களில் கதவை மூடி திறப்பார். இந்நிலையில், சமீபத்தில் இரயில்வே கேட் முன்பு, நடுப்பகுதியில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும்பொருட்டு நில் என்ற வாசகம் தமிழ் மொழி தவிர்த்து தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெற்று இருந்தது.
சர்ச்சைக்குரிய பதில்: இதனைகவனித்த உள்ளூர் மக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியபோது, சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து சர்ச்சைக்குரிய பதில் ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மேற்கூறிய விவகாரம் புகைப்படமாக எடுக்கப்பட்டு சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்து செய்யப்பட்டன. Twitter Accounts Banned: கடந்த ஒரு மாதத்தில் 3.3 இலட்சம் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு நீக்கம்: காரணம் என்ன?..!
மொத்தமாக அகற்றப்பட்டது: இதனால் விவகாரம் பூதாகாரமாவதை உணர்ந்தவர்கள், தற்காலிகமாக முதலில் பிரச்சனையை சரிசெய்ய எண்ணி காகிதத்தில் நில் என தமிழில் எழுதி ஓட்டினர். ஆனால், சில நிமிடங்களில் அடிக்கும் காற்றில் அவை பிய்த்துக்கொண்டு போய்விடும் என்பதால், இறுதியாக வேறு மொழியில் இடம்பெற்று இருந்த பலகை முற்றிலுமாக அகற்றப்பட்டது.