HC Grants Bail to Youth in Pocso Case: 17 வயது சிறுமியை தாயாக்கிய காதலனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம் - காரணம் இதுதான்.!
பதின்ம வயதில் காதலில் விழுந்து தாயான சிறுமி, காதலரை கரம்பிடிக்க விரும்பிய காரணத்தால் போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு ஜாமின் கிடைத்தது.
மே 02, அலகாபாத் (Allahabad News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது காதலருடன் நெருங்கி பழகியதால் (Bail for Pocso Case) கர்ப்பமாகி இருக்கிறார். இதனால் அவர் குழந்தையையும் தற்போது பெற்றெடுத்த நிலையில், அவரது காதலர் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமின் கேட்டு காதலர் கோரிக்கை: தற்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் (Allahabad Court Judgement) நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் தனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதுகுறித்த மனுவின் விசாரணையில், இளைஞரின் தரப்பில் வாதிடுகையில் சம்பந்தப்பட்ட பெண்மணியும், நானும் ஒருமித்த உறவில் இருந்தோம். H1N1 Bird Flu: அமெரிக்காவில் அதிர்ச்சி; பறவைக்காய்ச்சலால் கண்கள் குருடாகி உயிரிழந்த 24 பூனைகள்.. ஆய்வில் பதறவைக்கும் தகவல்.!
ஒருமித்த உறவில் இருந்ததாக சிறுமி வாக்குமூலம்: இதனால் நான் அவரை திருமணம் செய்ய உள்ளேன். எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். விரைவில் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்" என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனால் எதிர்மனுதாரரான சிறுமியிடம் விசாரணை நீதிபதிகள் நேரடி விசாரணை நடத்தினர். சிறுமியின் தான் இளைஞருடன் ஒருமித்த மனமொத்த உறவில் இருந்ததை உறுதி செய்தார்.
திருமண நிபந்தனையுடன் ஜாமினில் அனுப்பி வைப்பு: மேலும், தான் அவருடன் வாழ விரும்புவதாகவும் தனது வாதத்தை முன்வைத்தார். இதனையடுத்து, இருதரப்பு வாதத்தையும் குறித்துக் கொண்ட நீதிபதிகள், இளைஞருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். சிறுமிக்கு தற்போது திருமண வயது ஏற்றிவிட்ட நிலையில், பிணையில் சென்ற 15 நாட்களுக்குள் வழக்கறிஞர் ஒருவர் உதவியுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.