IPL Auction 2025 Live

Chithirai Festival 2023: கோலாகலமாக நடைபெற்றது மதுரை சித்திரை திருவிழா.. போட்டிபோட்டு தேரை வடம்பிடித்து இழுத்து கொண்டாடிய மக்கள்.!

இன்று மக்கள் மீனாட்சியின் தேரை வடம்பிடித்து இழுத்து வருகிறார்கள்.

Madurai Chithirai Festival 2023 Visual (Photo Credit: ANI)

மே 03, மதுரை (Madurai News): தூங்க நகரம், கோவில்களின் நகரம், மல்லிகை மாநகர் என்று பல பெருமைகளை கொண்ட மதுரை (Madurai) மீனாட்சி கோவிலின் சித்திரை திருவிழா (Chithirai Festival 2023) கடந்த ஏப்ரல் 24ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சொக்கநாதர்களாக இருந்து சிவன் பார்வதி ஆட்சி செய்த தெய்வங்களுக்கு திருவிழா எடுத்து, ஊரே விழாக்கோலம் பூண்டு சித்திரை திருவிழா சிறப்பிக்கப்படும். மே 3ம் தேதியான தேரோட்டம், வரும் மே 5ல் அழகர் ஆற்றில் இறங்கி மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறவுள்ளன. Kanyakumari Murder: 29 வயது இளம்பெண்ணின் மார்பு, தொடையை கடித்து கொன்ற இளைஞன்; குமரியில் அதிர்ச்சி சம்பவம்.. விசாரணையில் பரபரப்பு தகவல்.!

இந்நிலையில், இலட்சக்கணக்கான பக்தர்கள் இன்று நடைபெறும் தேர் இழுக்கும் திருவிழாவில் ஒன்றிணைந்து மீனாட்சியின் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். மதுரை மாநகரம் முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.