Ayudha Puja 2025: ஆயுத பூஜை எப்போது?.. சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாட்டு முறை.!
Ayudha Pooja 2025: 2025 ஆம் ஆண்டு ஆயுத பூஜை எப்போது வருகிறது?, நல்ல நேரம் , விரதம் இருக்க உகந்த நேரம் , சரஸ்வதியை வழிபடும் முறை என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம். கல்வி, தொழில் மற்றும் பணியில் முன்னேற்றம் பெற விரும்புபவர்கள் இப்பதிவில் முழு விபரங்களை அறிந்துகொள்ளலாம்.
செப்டம்பர் 27, சென்னை (Festival News): நவராத்திரி பண்டிகையை தொடர்ந்து இந்துக்கள் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகையாக சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை (Ayudha Puja 2025) நடைபெறுகின்றன. நவராத்திரி பூஜை ஒன்பது நாட்கள் நடைபெறும் போது, துர்க்கை அம்மனுக்கு மூன்று நாட்கள் பூஜை செய்யப்படுகிறது. அதன்பின் மூன்று நாட்களுக்கு லட்சுமி வழிபாடு நடக்கிறது. இறுதியாக மூன்றாவது கட்டத்தில் சரஸ்வதி தேவி வழிபாடு நடத்தப்படுகிறது. தனி மனிதனின் வாழ்க்கையில் கல்வி மிக முக்கியமானது என்பதால் சரஸ்வதி தாய் அறிவையும், ஞானத்தையும் வழங்கும் பொருட்டு பூஜை நடத்தப்படும். Navaratri Festival 2025: நவராத்திரி பண்டிகை 2025: ஒன்பது நாட்கள் வழிபாடுகளும், சிறப்புகளும்..!
ஆயுத பூஜை செய்வதற்கான நல்ல நேரம் (Ayudha Puja Time) :
2025 ஆம் ஆண்டுக்கான ஆயுத பூஜை பண்டிகை (Ayudha Puja Date) அக்டோபர் மாதம் 01-ஆம் தேதி காலை 09:15 முதல் 10:15 மணி வரை கொண்டாடப்படுகிறது. மாலை 4:45 மணி முதல் 05:45 மணிக்குள் பூஜை செய்ய நல்ல நேரமாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் 06:00 மணிக்கு மேல் 07:30க்குள் பூஜை செய்யலாம். இந்த நேரங்கள் இறைவனை வணங்க சிறந்த நேரங்களாகவும் கருதப்படுகின்றன.
ஆயுத பூஜை வழிமுறைகள் (Ayudha Pooja Vazhipadu):
- கருவிகள், வாகனங்கள், புத்தகங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.
- பின் திருநீறு கரைத்து 3 பட்டையிட்டு சந்தனம், குங்குமம் திலகமிட வேண்டும்.
- திலகமிட்டு பொருட்களை அம்பாளின் திருவுருவ புகைப்படத்திற்கு முன் வைத்து அம்பாளுக்கு பிரியமான உணவுப் பொருட்களை (சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல், பொரி, பழங்கள்) வைத்து படைக்கலாம்.
- வீட்டில் உள்ள கடவுளின் படங்களுக்கு முன் தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, ஊதுபத்தி, சாம்பிராணி வைத்து விளக்கேற்றியும் வழிபாடு செய்யலாம்.
- பாடம் படிப்பவர்கள், தொழிலாளர்கள், வாகன உரிமையாளர்கள் ஆகியோர் தங்கள் பணியிலும், கல்வியிலும் வெற்றியடைய அம்பாளுக்கு பிரார்த்தனை செய்யலாம்.
ஆயுத பூஜையில் கவனிக்க வேண்டியவை (Ayudha Pooja Celebration Methods Important Things):
- பூஜை செய்யும் இடம் சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும்.
- பூஜை நேரத்தில் கோபப்படுவது, வாக்குவாதங்கள் செய்வது, எதிர்மறை எண்ணங்களுடன் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
- மனதை அமைதிப்படுத்த தியானம் செய்து கடவுளை மனதார நினைத்து எடுத்த காரியம் வெற்றி பெற வேண்டலாம்.
- ஆயுத பூஜை தினத்தில் கல்வி சார்ந்த பொருட்கள் மற்றும் தொழில் கருவிகள், இயந்திரங்கள் போன்றவற்றுக்கு பூஜை செய்வதால் தொழில், கல்வி மற்றும் பணியில் முன்னேற்றம் கிடைக்கும்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)