Soya Mealmaker: மீல்மேக்கர் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. தீமையும் உள்ளது.. தெரிஞ்சிக்கோங்க.!
தாய்ப்பாலூட்டும் பெண்கள், கர்ப்பிணிகள் மருத்துவரை அணுகாமல் மீல்மேக்கர் சாப்பிட வேண்டாம்.
நவம்பர் 03, சென்னை (Health Tips): முட்டை, இறைச்சி வகை உணவுகள், மீன் போன்றவற்றை சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கிறது. சைவம் மட்டும் சாப்பிடும் சைவப் பிரியர்கள் காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வது இயல்பு.
இதில் சைவ உணவு பிரியர்களுக்காக, அவர்களுக்கு ஏற்படும் புரதச்சத்து பற்றாக்குறையை சந்திக்கும் நபர்களின் தேவையை பூர்த்தி செய்ய, சோயா மீல்மேக்கர் தயாரிக்கப்பட்டது. சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் சோயா மீல்மேக்கர் மூலமாக, உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கும்.
அதேபோல, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்றவையும் இருக்கின்றன. சோயாவிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கிடைக்கும், சோயா கழிவுகள் மீல்மேக்கராக தயாரிக்கப்படுகிறது.
சோயா மீல்மேக்கரில் இருக்கும் புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3 போன்றவை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும். இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை ஏற்படுத்தும். Bihar Shocker: 7 வயது மகளின் தலையை துண்டித்து கொலை செய்த கொடும்பாவி தந்தை; கணவன்-மனைவி சண்டையில் கொடூரம்.!
நார்ச்சத்து நிறைந்த சோயா மீல்மேக்கர், வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால் பசியை கட்டுப்படுத்தும். இதனால் அடிக்கடி பசிக்கும் ஆர்வம் குறைந்து, உணவு கட்டுப்பாடு வருவதால் மெட்டபாலிசத்தின் வேகம் அதிகரித்து உடல் எடை குறையும்.
மீல்மேக்கரில் இருக்கும் பைட்டோ ஈஸ்டிரோஜன் மனநிலை மாற்றம், அமைதி, புத்துணர்ச்சியை தரும். செரிமான ஆற்றலுக்கும் உதவி செய்யும். இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்.
உடலுக்கு இவ்வாறான பல நன்மைகளை வழங்கும் மீல்மேக்கரை, அதிகம் சாப்பிடுவது ஹார்மோன் சமநிலையை மாற்றும். எந்நேரமும் மீல் மேக்கர் சாப்பிடுவது, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, உடல் ஒவ்வாமை பிரச்சனையை உண்டாக்கும்.
பைட்டோ ஈஸ்டிரோஜனின் அளவு உடலில் அதிகரிக்கும் பட்சத்தில், சிறுநீரக செயலிழப்புக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தாய்ப்பாலூட்டும் பெண்கள், கர்ப்பிணிகள் மருத்துவரை அணுகாமல் மீல்மேக்கர் சாப்பிடுவது பெரிய பிரச்சனை ஏற்படுத்திவிடும். விருப்பத்தின் பேரில் எப்போதாவது ஒருநாள் அதனை எடுத்துக் கொள்வது பிரச்சனை இல்லை.
ஒரு நபர் நாளொன்றுக்கு 25 முதல் 30 கிராம் வரையிலான மீல்மேக்கரை மட்டுமே சாப்பிடலாம். அளவுக்கு அதிகமாக மீல்மேக்கர் சாப்பிட்டால், புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருக்கின்றன.