AstraZeneca Withdrawn Covid 19 Vaccine: உலகளவில் தனது கோவிட் 19 தடுப்பூசிகளை திரும்ப பெறும் அஸ்ட்ராஜெனெகா: பக்கவிளைவுகளால் நடவடிக்கை.!
கொரோனா வைரஸ் வந்தபோது தடுப்பூசிக்காக காத்திருந்த மக்களுக்கு விடியலைத் தந்த அஸ்ட்ராஜெனெகா, தற்போதும் காலம் கடந்து அதிர்ச்சி தந்துள்ளது.
மே 08, புதுடெல்லி (NewDelhi): கடந்த 2019ம் ஆண்டுக்கு பின் சீனாவில் பரவத்தொடங்கி, அதனைத்தொடர்ந்து உலகையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக பலகட்ட அலைகளாக அச்சுறுத்திய கொரோனா (Corona Virus Outbreak) வைரஸ் பரவல், இன்று வரை மக்களால் மறக்க இயலாத மிகப்பெரிய தொற்றுநோயாக அமைந்தது. அரசின் கட்டுப்பாடுகள், அதனால் மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள் என பல துயரங்கள் தொடர்கதையாகின. தற்போது வரை இவ்வைரசுக்கு உலகளவில் 704,753,890 பேர் பாதிக்கப்பட்டு, 7,010,681 பேர் உயிரிழந்தனர். Man Died after Slapping Several Times: வழிவிடும் தகராறில் வாக்குவாதம்; கன்னத்தில் பளார் வாங்கிய இளைஞர் மர்ம மரணம்.. பெங்களூரில் அதிர்ச்சி.!
மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளில் முக்கியமான ஒன்று: கொரோனா வைரஸின் பிடியில் இருந்து தப்பிக்க, உலகளவில் அடுத்தடுத்து தடுப்பூசிகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கோவிட்ஷீல்ட் (AstraZeneca Covishield), பாரத் பாயாண்டெக்கின் கோவேக்சின், ரஷியாவின் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டன. இவற்றில் கோவிட்ஷீல்ட் தொடக்கத்தில் மக்களால் பெரிதும் செலுத்திக்கொள்ளப்பட்டது. சமீபத்தில் அஸ்ட்ராஜெனெகா தனது தடுப்பூசியால் மக்களுக்கு பக்க விளைவு ஏற்படுகிறது என கூறியது. Man Died after Slapping Several Times: வழிவிடும் தகராறில் வாக்குவாதம்; கன்னத்தில் பளார் வாங்கிய இளைஞர் மர்ம மரணம்.. பெங்களூரில் அதிர்ச்சி.!
தடுப்பூசியை திரும்ப பெறும் நிருவனம்: இரத்தம் உறைதல், மூளைப்பாதிப்பு, பக்கவிளைவு, நுரையீரல் அடைப்பு உட்பட பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் அஸ்ட்ராஜெனெகா உறுதி செய்தது. இதனால் கோவிட்ஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பலரும் அச்சத்தில் ஆழ்ந்தனர். ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பலரும் திடீர் மரணத்தை சந்தித்தது, முன்னதாகவே கோவிட்ஷீல்ட் தடுப்பூசியின் மீதான அச்சத்தை ஏற்படுத்தி அதனை உறுதி செய்தது. இந்நிலையில், கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து, தற்போது வரை புதுப்பிப்பு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட கொரோனா வைரசுக்கு எதிரான அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை தாங்கள் திரும்ப பெறத்தொடங்கி இருக்கிறோம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ராய்ட்டர்சிடம் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக அந்நிறுவனம் நேரடியாக தனது மருந்துகள் அனைத்தையும் திரும்ப பெறுகிறது.