மே 08, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் (Bangalore Youth Died in Sleeping After Sl) பகுதியில் வசித்து வருபவர் பிரசாத், இவர் சம்பவத்தன்று மதுபோதையில் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். வழியில் இவரின் வாகனத்தை அணில் என்பவரின் மனைவி காரில் பின் தொடர்ந்து தனது குடியிருப்புக்கு பயணம் செய்துள்ளார். இந்நிலையில், பிரசாத் பயணித்த வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட பெண்மணி, அதற்காக தனது காரில் ஹாரன் அடித்தபடி பயணித்துள்ளார். பிரசாத் காருக்கு வழிவிடவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் காரில் இருசக்கர வாகனத்தை முந்திச்சென்ற பெண்மணி, பிரசாத்திடம் கடுமையான வாக்குவாதம் செய்துள்ளார். Dog Attack: திடீரென சிறுமியை தாக்கிய நாய்; லிப்டுக்குள் குதித்து மறு தாக்குதலில் தப்பித்த சிறுமி.. பதறவைக்கும் வீடியோ.!
கன்னத்தில் பளார் வாங்கியதால் சோகம்? அப்போது அணில் பிரசாத்தை கன்னத்திலேயே பலமுறை பளாரென அரைவிட்டதாக கூறப்படுகிறது. பின் அக்கம்பக்கத்தினர் தலையிட்டு வாக்குவாதத்தை நிறைவு செய்து இரு தரப்பையும் அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்று இரவு 10 மணியளவில் உறங்கிய பிரசாத், நள்ளிரவு ஒரு மணியளவில் அசைவற்று கிடந்துள்ளார். இதனால் அவரை அவரது தாயார் விஜயலட்சுமி எழுப்பு முயற்சி செய்யவே, மகன் மயங்கி இருப்பதை உணர்த்த அவர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தற்போது பிரசாத்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.